சம்சர் ரகுமான்
சம்சர் ரகுமான் (Shamsur Rahman (poet) வங்காள மொழி: শামসুর রাহমান ; 23 அக்டோபர் 1929 - 17 ஆகஸ்ட் 2006) ஒரு வங்களாதேச கவிஞர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். ஒரு சிறந்த எழுத்தாளரான ரகுமான் அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் வங்காள இலக்கியத்தில் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இவர் வங்காளதேசத்தின் அதிகாரப்பூர்வமற்ற அரசவைக் கவிஞராகக் கருதப்பட்டார். அவரது கவிதை மற்றும் எழுத்துக்களில் தாராளவாத மனிதநேயம், மனித உறவுகள், இளைஞர்களின் காதல் கிளர்ச்சி, வங்காளதேசத்தில் தோன்றிய மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்வுகள் மற்றும் மத அடிப்படைவாதத்திற்கு எதிர்ப்பு ஆகியவை முக்கியக் கருப்பொருளாக உள்ளது.
கல்வி
தொகுசம்சூர் ரகுமான் மஹுத்-துலி, டாக்காவில் தனது தாத்தாவின் வீட்டில் பிறந்தார். நர்சிங்டி மாவட்டத்தின் ராய்புரா தானாவுக்கு அருகில், பஹர்டோலி என்ற கிராமத்தில் மேக்னா ஆற்றின் கரையில் அவரது மூதாதையர் வீடு அமைந்துள்ளது. இவரது பெற்றோருக்கு இவர் பதின்மூன்று குழந்தைகளில் நான்காவது குழந்தை ஆவார். இவர் போகோஸ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். அந்தப் பள்ளியில் 1945 ஆம் ஆண்டில் இவர் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் இவர் டாக்கா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கவிதை எழுதத் துவங்கினார். தனது 18 ஆம் வயதில் இவர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.இவர் மூன்று ஆண்டுகளாக டாக்கா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார், ஆனால் தேர்வில் கல்ந்துகொள்ளவில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலப் பிரிவில் சேர்க்கப்பட்டு 1953 ஆம் ஆண்டில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்பு அதே கல்லூரியில் இவர் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மெட்ரிகுலேசன் தேர்விற்குப் பிறகு இவர் தனது ஓய்வு நேரத்தில் ரவீந்திரநாத் தாகூரின் கோல்போ குச்சோவைப் படித்தார். இந்த புத்தகம் தன்னை அசாதாரண உலகத்திற்கு அழைத்துச் சென்று முற்றிலும் மாறுபட்ட ஆளுமையாக மாற்றியது என்று இவர் கூறினார். 1949 ஆம் ஆண்டில், அவரது கவிதை யுனிஷோ யூனோபொன்ச்சாஷ் வெளியானது. இந்த கவிதையினை நளினி கிசோர் தொகுத்து சோனார் பங்களா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இவர், 1980 ஆம் ஆண்டுகளில் தேசிய நாளேடான டைனிக் பங்களா மற்றும் வீக்லி பிச்சித்ராவின் பத்திரிகையாளராக நீண்ட காலமாக பணியாற்றினார். பிறவியில் இருந்தே ஒரு கூச்ச சுபாவமுள்ள இவர் 1990 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் மத அடிப்படைவாதம் மற்றும் பிற்போக்குத்தனமான தேசியவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதன் விளைவாக, இவர் அரசியல் ரீதியாக இஸ்லாமியர்களின் எதிரியாக கருதப்பட்டார். இது சனவரி 1999 ஆம் ஆண்டில் போராளி ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமியால் இவர் கொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சியில் இருந்து தப்பினார்.
இறப்பு
தொகு1990 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. இரண்டு சந்தர்ப்பங்களில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 12 நாட்கள் கோமா நிலையில் இருந்த இவர் இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஆகஸ்ட் 17, 2006 அன்று இறந்தார். அப்போது அவருக்கு வயது 76 ஆகும்.[1][2]
அஞ்சலி
தொகுமரணத்திற்குப் பின் அக்டோபர் 23, 2018 அன்று ரஹ்மானின் 89 வது பிறந்தநாளில் கூகிள் கேலிச் சித்திரம் மூலம் அவரை கௌரவித்தது.[3]
விருதுகள்
தொகுஆடம்ஜி விருது (1962) பங்களா அகாடமி இலக்கிய விருது (1969)
ஏகுஷே படக் (1977) ஸ்வாதிநாதா திபோஷ் விருது (1991)
ஜப்பானின் மிட்சுபிஷி விருது (1992) இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த புரோஷ்கர் (1994).
முதுநிலை ஆசிரியர்களுக்கான டி.எல்.எம் தெற்காசிய இலக்கிய விருது, 2006.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "Legendary Bangladeshi poet dies". BBC News. 17 August 2006. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5260442.stm.
- ↑ "Shamsur Rahman, Bangladeshi Poet, Dies". The New York Times. 19 August 2006. https://www.nytimes.com/2006/08/19/obituaries/19rahman.html?_r=1&oref=slogin. பார்த்த நாள்: 23 May 2010.
- ↑ "Shamsur Rahman’s 89th Birthday". Google. October 23, 2018. https://www.google.com/doodles/shamsur-rahmans-89th-birthday. பார்த்த நாள்: October 28, 2018.
- ↑ "Shamsur Rahman gets TLM Salam award of India". New Age இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930204125/http://www.newagebd.com/2006/mar/22/met.html.