சம்பூங் பல் பொருள் அங்காடி விபத்து

1995 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நிகழ்ந்த பேரிடர்

சம்பூங்க் பல்பொருள் அங்காடி விபத்து (ஆங்கிலம் : Sampoong Department Store collapse) என்பது ஜூன் 29, 1995 அன்று தென் கொரியாவின் சியோலின் சியோச்சோ-கு மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு கட்டுமானத்தில் ஏற்பட்ட தோல்வியாகும். இந்த விபத்து தென் கொரிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாகும், இதில் 502 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 937 பேர் காயமடைந்தனர். இது நியூயார்க் நகரில் செப்டம்பர் 11 தாக்குதல்களில் நடந்த மிக மோசமான நவீன கட்டிட விபத்து மற்றும் 2013 இல் வங்க தேசத்தின் டாக்கா அருகே சவர் கட்டிடடத்தை வேண்டுமென்றே இடித்தது வரையில் உள்ள கட்டிட விபத்து என்ற இரு விபத்துகளுக்கும் முன்னர் இதுவே மிகப்பெரியதாக இருந்தது.[1][2]

பின்னணி

தொகு

1988 கோடைகால ஒலிம்பிக்கிற்கு வழிவகுத்த நிகழ்வுகளில், சியோல் பகுதியில் ஒரு பெரிய வளர்ச்சி ஏற்றம் காணப்பட்டது. அந்த நேரத்தில் சியோலில் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட சர்வதேச கட்டுமான ஒப்பந்தக்காரர்களுக்கு எதிரான தடைகள் காரணமாக, கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களும் தென் கொரிய நிறுவனங்களால் அமைக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான திட்டங்களைப் பெற்றதால் கட்டமைப்புகளை விரைவாகக் கட்ட ஆரம்பித்தன.[3]

சம்பூங் குழுமம் 1987 ஆம் ஆண்டில் சம்பூங் பல்பொருள் அங்காடியை நிர்மாணிக்கத் தொடங்கியது, முன்னர் ஒரு நிலப்பரப்பாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது, கட்டிடத்தின் திட்டங்கள் வூசுங் கட்டுமானத்தால் கட்டப்படும் முதலில் நான்கு தளங்களைக் கொண்ட ஒரு குடியிருப்பாக கட்ட திட்டமிடப்பட்டது.[3] இருப்பினும், கட்டுமானத்தின் போது, கட்டிடத்தின் வருங்காலத் தலைவரான லீ ஜூன் அவர்களால் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியை உருவாக்க இந்த வரைபடங்கள் மாற்றப்பட்டன. நகரும் படிக்கட்டுகளை நிறுவ பல தூண்களை கட்டுவது மற்றும் ஐந்தாவது மாடியைச் சேர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.[4] வூசுங் மாற்றங்களைச் செய்ய மறுத்தபோது, லீ எச்சரிக்கைகளை புறக்கணித்து தனது சொந்த கட்டிட நிறுவனத்தை பயன்படுத்தி கட்டுமானத்தை முடித்தார்.[5] இந்த கட்டிடம் 1989 இன் பிற்பகுதியில் நிறைவடைந்தது, 1990 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சம்பூங்பல்பொருள் அங்காடி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது, இது கட்டிடத்தின் ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 40,000 மக்களை ஈர்த்தது. இந்த கடை ஒரு அறையால் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அலகுகளைக் கொண்டிருந்தது.

சரிவு

தொகு

ஏப்ரல் 1995 இல், தெற்குப் பிரிவின் ஐந்தாவது மாடியின் கூரையில் விரிசல் தோன்றத் தொடங்கியது. லீ மற்றும் அவரது நிர்வாக ஊழியர்கள், மேல் தளத்திலிருந்து அடித்தளத்திற்கு பொருட்கள் மற்றும் கடைகளை நகர்த்த்தினர்.

ஜூன் 29 காலை, இப்பகுதியில் விரிசல்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது, மேலாளர்கள் மேல் தளத்தை மூடி, காற்றுப் பதனாக்கக் கருவிகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். கட்டிட நிர்வாகம் கட்டிடத்தை மூடவோ அல்லது முறையான வெளியேற்ற உத்தரவுகளை வழங்கவோ தவறிவிட்டது,[3][6] ஏனெனில் கட்டிடத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தது, மேலும் அது அன்றைய வருவாயை இழக்க விரும்பவில்லை. இருப்பினும், நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக வளாகத்தை விட்டு வெளியேறினர். கட்டிட பொறியியல் வல்லுநர்கள் இந்த கட்டமைப்பை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டபோது, கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக ஒரு மேம்போக்கான சோதனையில் தெரியவந்தது.

சுமார் பிற்பகல் 5:00 மணிக்கு( கொரியா நிலையான நேரம் (UTC + 9: 00)), ஐந்தாவது மாடியின் உட்கூரை சரியத் தொடங்கியது, அங்காடி ஊழியர்கள் ஐந்தாவது மாடிக்கு வாடிக்கையாளர் செல்வதைத் தடுத்தனர். விபத்துக்குள்ளான 57 நிமிடங்களுக்கு முன்னர், இந்த அங்காடி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களால் நிரம்பியிருந்தது, ஆனால் லீ அந்த நேரத்தில் அங்காடியை மூடவில்லை அல்லது பழுதுபார்க்கவில்லை. மாலை 5:52 மணியளவில் கட்டிடம் வெடிக்கும் ஒலிகளை உருவாக்கத் தொடங்கியபோது, தொழிலாளர்கள் அலாரங்களை ஒலிக்கச் செய்து கட்டிடத்தை காலி செய்யத் தொடங்கினர், ஆனால் அது மிகவும் தாமதமானது.

இன்று தளம்

தொகு

அங்காடியின் எச்சங்கள் விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு முழுவதும் இடிக்கப்பட்டன; இந்த தளம் பின்னர் 2000 வரை காலியாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அந்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டும் என்று கோரியது, ஆனால் அதை சியோச்சு மாவட்ட அரசாங்கம் எதிர்த்தது. ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கையில், நினைவுச்சின்னம் வேறொரு இடத்தில் கட்டப்பட்டது மற்றும் இந்த நிலம் ஒரு தனியார் கட்டிடநிறுவனத்திற்கு விற்கப்பட்டது.[7] இடிந்து விழுந்த இடம் இப்போது ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக உள்ளது. அக்ரோவிஸ்டா அடுக்குமாடி குடியிருப்புகள் என்ற இதன் கட்டுமானம் 2001 இல் தொடங்கி 2004 இல் நிறைவடைந்தது..[8]

குறிப்புகள்

தொகு
  1. "Bangladesh building collapse death toll passes 700". BBC News. 7 May 2013. https://www.bbc.co.uk/news/world-asia-22431151. பார்த்த நாள்: 7 May 2013. 
  2. "<삼풍참사 20년> ① 그날 삼풍백화점에선 무슨 일이 있었나". June 28, 2015. http://www.yonhapnews.co.kr/bulletin/2015/06/25/0200000000AKR20150625216300004.HTML. 
  3. 3.0 3.1 3.2 "Sampoong Department Store". Failures. 2017-11-27. Archived from the original on 2018-07-30. பார்க்கப்பட்ட நாள் 2018-08-24.
  4. "China's weapons of mass construction". The News From Wabu-eup. July 2, 2009. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
  5. Marshall, Colin (2015-05-27). "Learning from Seoul's Sampoong Department Store disaster – a history of cities in 50 buildings, day 44". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09.
  6. Collapse: When Buildings Fall Down. பார்க்கப்பட்ட நாள் 2016-02-09.
  7. "「삼풍참사」희생자 위령탑 세운다…양재 시민의숲 남쪽에". http://news.donga.com/3/all/19970722/7271525/1. 
  8. "Daesang Acrovista". Emporis.