சம்போர்
சாம்போர் (Samphor) ( கெமர்: សំភោរ ; சாம்போ என்றும் ரோமானியப்படுத்தப்பட்டது ) என்பது கம்போடியாவைச் சேர்ந்த ஒரு சிறிய, 2-தலை பீப்பாய் வடிவ இசைக்கருவியாகும். இது தோராயமாக .35 மீட்டர் அகலமும் .5 மீட்டர் நீளமும் கொண்டது.[1][2] இரண்டு தலைகளைக் கொண்டுள்ள இரு கைகளாலும் இசைக்கப்படுகிறது. [1] இசைக்கலைஞரின் திறனைப் பொறுத்து, இதில் 8 வெவ்வேறு சுருதிகளை உருவாக்க முடியும். [1] இது இசுராலையுடன் இணைந்து குத்துச்சண்டை போட்டிகளிலும் இசைக்கப்படுகிறது. சாம்போர் தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் தபோனுக்கு ஒப்பானது .
ஒரு மரத்தை துளையிட்டு பீப்பாய் வடிவத்தில் ஒரு சாம்போர் தயாரிக்கப்படுகிறது. [3] இரண்டு முனைகளும் கன்று தோலால் மூடப்பட்டிருக்கும். தோல் அல்லது பிரம்பு கீற்றுகளால் இறுக்கப்படுகிறது. [2] வெவ்வேறு தாளங்களை வெளிப்படுத்த இதன் ஒரு பகுதி மற்றொன்றை விட பெரியதாக வடிவமைக்கப்படுகிறது. [2] பாரம்பரியமாக, தயாரிப்பாளர் அரிசி மற்றும் சாம்பலில் செய்யப்பட்ட கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு தலையையும் மெருகேற்றுகிறார். [2] தோலின் தலையை சரிசெய்யும் சுருதி சாம்பல் தடிமனான அடுக்குடன் குறைவாக மாறும். [2]
இசைக் கலைஞர் நான்கு வித்தியாசமான தாளங்களைப் பயன்படுத்துகிறார். இந்த நான்கு ஒலிகளுக்கும் "திங், திப், தியோங், தப் என கம்போடியப் பெயர் உண்டு.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Khean, Yun; Dorivan, Keo; Lina, Y; Lenna, Mao. Traditional Musical Instruments of Cambodia (PDF). Kingdom of Cambodia: United Nations Educational, Scientific and Cultural Organization. p. 226.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Skor". angelfire.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ "Skor". angelfire.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018."Skor". angelfire.com. Retrieved 27 October 2018.