சம்மநாடு தேவி கோயில்
சம்மநாடு தேவி கோயில், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு இந்துக்கோயிலாகும். [1] தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில், வைட்டிலாவிற்கும் சேர்த்தலா நகரத்திற்கும் இடையே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கும்ப மாதத்தில் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
துணைக்கோயில்கள்
தொகுஇங்கு சாஸ்தா கோவில், கிருஷ்ணர் கோயில் ஆகிய இரண்டு துணைக் கோயில்கள் உள்ளன:
நிர்வாகம்
தொகுஇந்தக் கோயிலானது "எட்டு வீட்டில் கார்த்த குடும்பம்" என்று அழைக்கப்படுகின்ற குடும்பத்திற்குச் சொந்தமானதாகும். அக்குடும்பத்தில் எட்டு குடும்பங்களும், அவர்களது துணைக் குடும்பங்களும் உள்ளன. அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.