வைட்டிலா
வைட்டிலா (ஆங்கிலம்: Vyttila) இந்திய மாநிலமான கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சியின் சந்திப்புப் பகுதியாகும். வைட்டிலாவில் பேருந்து நிலையம் உண்டு.[1]. இது மிகவும் பரபரப்பான பகுதியாகும். மேலும் கேரளாவின் மிகப்பெரிய சந்திப்புகளில் ஒன்றாகும்.[2] இந்தப் பகுதி கேரள மாநிலத்தின் முக்கிய வடக்கு-தெற்கு பகுதிகளை கொச்சி புறவழிச் சாலையைக் கொண்டு பிரிக்கிறது. எஸ்.ஏ. சாலை (கிழக்கு-மேற்கு திசையில் நகரத்தின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று), வைட்டிலா-பெட்டா சாலை, மற்றும் தம்மனம் சாலை ஆகியவை.
வைட்டிலா என்ற பெயர் நெல் வயலின் முக்கிய பகுதி என்று பொருள்படும். "வயல் தலா" என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. ஒருமுறை எலாம்குளம் உள்ளிட்ட பகுதி நெல் வயல்களாகவும், நெல் சாகுபடி முக்கிய வருமான ஆதாரமாகவும் இருந்தது. எறணாகுளம், கிரிநகர், பனம்பிள்ளி நகர், காந்தி நகர், சவகர் நகர், குமாரனாசான் நகர் ஆகியவற்றில் நெல் வயல் இருந்தது மற்றும் கனியம்புழா மற்றும் பனம்குட்டி பாலம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. சிலர் கூறுகையில், ஒரு சில வழிப்பறிக் கொள்ளையர்கள் மற்றும் பயணிகளைக் கொன்று கொள்ளையடித்தவர்களை, 'வஜிதாலா' என்று அழைதனர். அதிலிருந்து இப்பெயர் உருவானது. ஒருமுறை சிலவென்னூர் ஏரியையும் செட்டிச்சிராவையும் இணைக்கும் புத்தன்பலம் பாலம் வயல்தலாவிலிருந்து எறணாகுளத்துடன் இணைக்கப்பட்ட ஒரே இணைப்பு ஆகும்
வைட்டிலா மொபிலிட்டி ஹப்பை இது கொண்டுள்ளது, இது போக்குவரத்தின் பல்வேறு வழிகளை (அதாவது உள்ளூர் மற்றும் நீண்ட தூர பேருந்துகள், ரயில், மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து) நகரத்திற்கு ஒரே முனையில் இணைக்கிறது.[3]
வைட்டிலா மேலும் ,கொச்சி நகரத்தின், பெயர் பெற்ற பிராந்தியத்தில் உள்ள ஒரு பகுதியாக உள்ளது. 1967 வரை, வைட்டிலா ஒரு பஞ்சாயத்தாக இருந்தது. நவம்பர் 1967 கேரள சட்டமன்றத்தின் உத்தரவுபடி வைட்டிலாவை புதிதாக அமைக்கப்பட்ட கொச்சி நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
சாலிகாவட்டம்
தொகுசாலிகாவட்டம் வைட்டிலாவிலின் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
வைட்டிலா மொபிலிட்டி ஹப்
தொகுவைட்டிலா மொபிலிட்டி ஹப்பை கொண்டுள்ளது, இது பல்வேறு வகையான போக்குவரத்தை (அதாவது உள்ளூர் மற்றும் நீண்ட தூர பேருந்துகள், ரயில், மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து) கொச்சி நகரத்திற்கு ஒரே முனையில் இணைக்கிறது. திட்டத்தின் முதல் கட்டம் 13 பேருந்து நிலையங்களை கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 5 பேருந்துகளை நிறுத்த முடியும்.[4] இவ்வாறு, முதல் கட்டம் முடிந்ததும், முனையத்தில் ஒரு நேரத்தில் 65 பேருந்துகளை கையாள முடியும். முன்மொழியப்பட்ட முதல் கட்டத்தின் ஒரு பகுதி பணிகள் 2011 பிப்ரவரி 26 அன்று தொடங்கப்பட்டது.[3][5] இப் பணிகள் முடிவடைவதற்கு முன்பே, மார்ச் 1, 2011 அன்று எதிர்பார்க்கப்படும் மாநிலத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்பு முனையத்தைத் திறப்பதற்கான அரசியல் முடிவின் காரணமாக இது திடங்கப்பட்டது. இதுவரை திட்டமிடப்படடு முன்மொழியப்பட்ட 13 பேருந்து நிறுத்துமிடங்களில் நான்கு கட்டப்பட்டுள்ளது. மேலும் 3 பேருந்து நிறுத்துமிடங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. இயக்கம் மையமாக கனியம்புழா சாலை மற்றும் பூனித்துரா கிராம அலுவலகம்' ஆகியவற்றுக்கிடையிலான பகுதியில், வட கிழக்கே அமைந்துள்ளது. வைட்டிலா என்பது நகரத்தின் முனை ஆகும், இது அண்டை மாவட்டங்களான திரிசூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடூக்கி ஆகியவற்றுடன் இணைக்கிறது.
குறிப்புகள்
தொகு- ↑ http://www.cochinsquare.com/vytilla-bus-terminal-set-to-become-a-reality/
- ↑ Reporter, Staff (2018-04-07). "Unprecedented traffic jam at Vyttila" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/cities/Kochi/unprecedented-traffic-jam-at-vyttila/article23468683.ece.
- ↑ 3.0 3.1 "Archive News". The Hindu.
- ↑ Metro Manorama, 26 February 2011, P3
- ↑ "First phase of Vyttila Mobility Hub opened".
- http://www.vyttila.com - the portal for the busiest & biggest junction - VYTTILA
- http://www.cochinsquare.com/vytilla-bus-terminal-set-to-become-a-reality/
- http://article.wn.com/view/2010/01/22/Decks_cleared_for_Vytilla_bus_terminal/
- http://www.24dunia.com/english-news/search/buses-from-vytilla.html பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.hindu.com/2009/08/12/stories/2009081258670300.htm பரணிடப்பட்டது 2010-11-13 at the வந்தவழி இயந்திரம்
- http://www.keraladaily.net/index.php?mod=article&cat=keralanews&article=941 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்