சயான் (Sayan) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும். சூரத் மாநகராட்சிப் பகுதியில் இருக்கும் முதன்மையான தொழிற்சாலை நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 228 இல் சூரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் சயான் அமைந்துள்ளது. இவ்வூரில் சர்க்கரை ஆலைகள் பிரபலமாகும். இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் கோலிசு என்ற பூர்வகுடிகள் ஆவர்.

சயான்
Sayan
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
பரப்பளவு
 • மொத்தம்7 km2 (3 sq mi)
ஏற்றம்
19 m (62 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அண்மை நகரம்சூரத்

புவியியல் அமைப்பு

தொகு

21°19′01″ வடக்கு 72°52′40″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சயான் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 19 மீட்டர் உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 22,000 ஆகும். இம்மக்கள் தொகையில் 50 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 50 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். சயான் நகரின் படிப்பறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 90% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 87% ஆகும். மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயான்&oldid=3575210" இலிருந்து மீள்விக்கப்பட்டது