சயார்சைடு
சயார்சைடு (Cyaarside) என்பது As≡C− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். சியார்சைடு என்ற பெயராலும் இந்த அயனி அறியப்படுகிறது. இந்த எதிர்மின் அயனியில் ஆர்சனிக்கு மற்றும் கார்பனுக்கு இடையில் ஓர் முப்பிணைப்பு இடம்பெற்றிருக்கும். சயனைடு மற்றும் சயபைடு சேர்மங்களின் ஆர்சனைடு ஒப்புமையாக இச்சேர்மம் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சயார்சைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிடோகார்பனேட்டு(II) | |
வேறு பெயர்கள்
சயார்சைடு[1]
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CAs− | |
வாய்ப்பாட்டு எடை | 86.93 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசயனேட்டு மற்றும் பாசுபோயெத்திலோனேட்டு சேர்மங்களின் ஆர்சனிக்கு ஒப்புமையை ஆர்சாயெத்தினோலேட்டு எதிர்மின் அயனியின் C−O பிணைப்பை பிளப்பதன் மூலம் ஆக்டினைடு சயார்சைடு அணைவுச் சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[2] [((Ad,MeArO)3N)UIII(DME)] என்ற யுரேனியம் அணைவுச் சேர்மம் 2,2,2- கிரிப்டாண்டு ஈந்தணைவி முன்னிலையில் ஒரு மோலார் சமான [Na(OCAs)(டையாக்சேன்)
2.5] உடன் வினைபுரிந்து சயார்சைடு ஈந்தணைவியைக் கொண்ட ஈரணு ஆக்சோ பால யுரேனியம் ஒருங்கிணைவுச் சேர்மம் உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Beyond Cyanide: Future Synthons Based on the Cyaphide and Cyarside Ions for the Synthesis of Designer Magnetic Coordination Polymers". Grants on the Web. EPSRC. பார்க்கப்பட்ட நாள் 5 August 2023.
- ↑ Hoerger, Christopher J.; Heinemann, Frank W.; Louyriac, Elisa; Rigo, Massimo; Maron, Laurent; Grützmacher, Hansjörg; Driess, Matthias; Meyer, Karsten (2019). "Cyaarside (CAs–) and 1,3-Diarsaallendiide (AsCAs2–) Ligands Coordinated to Uranium and Generated via Activation of the Arsaethynolate Ligand (OCAs–).". Angewandte Chemie 58 (6): 1679–1683. doi:10.1002/anie.201811332. பப்மெட்:30427562.