சரத் பட்டநாயக்கு
சரத் பட்டநாயக்கு (Sarat Pattanayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஒடிசாவில் உள்ள பலாங்கீர் பகுதியைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான 10 ஆவது மற்றும் 11 ஆவது மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். [1] [2] [3]
சரத்து பட்டநாயக்கு Sarat Pattanayak | |
---|---|
ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2022 | |
முன்னையவர் | நிரஞ்சன் பட்நாயக்கு |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1991–1998 | |
முன்னையவர் | பால்கோபால் மிசுரா |
பின்னவர் | சங்கீதா குமாரி சிங்க் டேவ் |
தொகுதி | பலாங்கீர் நாடாளுமன்றத் தொகுதி, ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 திசம்பர் 1956 சைந்தலா, ஒடிசா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நமீதா பட்டநாயக்கு |
மூலம்: [1] |
ஆரம்ப வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்
தொகுசூகுல் பட்டநாயக்கின் மகனாக 1956 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று பலாங்கீருக்கு அருகிலுள்ள சைந்தலாவில் இவர் பிறந்தார். நமீதா பட்டநாயக்கை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது இளங்கலைப் பட்டப்படிப்பை பலாங்கீரின் இராசேந்திரா கல்லூரியில் முடித்தார். பின்னர் கங்காதர் மெகர் கல்லூரி மற்றும் சம்பல்பூரில் உள்ள இலச்பத் ராய் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். [4]
1992 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொருளாதார தாராளமயமாக்கல் குறித்து இவருக்கு நெருக்கமான பார்வையை வழங்கிய அப்போதைய ஆளும் பிவி நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். சரத்து தற்போது ஒடிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. House of the People (1997). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ India Today. Aroon Purie for Living Media India Limited. 1996. p. 69. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ Statistical Report on General Elections, 1999, to the Thirteenth Lok Sabha: Details for assembly segments of parliamentary constituencies, pt. 1. Andhra Pradesh to Maharashtra. pt. 2. Manipur to West Bengal & U.Ts. Election Commission of India. 2000. p. 676. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ "lsor02". பார்க்கப்பட்ட நாள் 2022-06-12.