சரவணன் என்கிற சூர்யா

இந்தியத் தமிழ் திரைப்படம்

சரவணன் என்கிற சூர்யா 2014-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.

சரவணன் என்கிற சூர்யா
இயக்கம்ராஜா சுப்பையா
கதைராஜா சுப்பையா
நடிப்பு
கலையகம்ஃபன்டூன் டாக்கீஸ் தயாரிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • ராஜா சுப்பையா
  • நேஹா காயத்திரி
  • மதன் பாப்
  • லொல்லு சபா பாபு
  • அனுராதா
  • கிருஷ்ணமூர்த்தி
  • சம்பத்
  • கே.பி.சிவா

சுமாராக இருக்கும் ஒருவன் தன்னை சூர்யா போல நினைத்துக் கொள்கிறான். அவனை விருப்பும் உள்ளூர் பெண்களை எல்லாம் ஒதுக்குகிறான். ஒரு அழகியைத்தான் திருமணம் செய்வது என்று இருக்கிறான். அப்படி ஒரு அழகியையும் சந்திக்கிறான். அவனை அவள் மதிக்கவில்லை. அவர்களுக்குள் காதல் வருகிறதா? எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கிறான் என்பதே கதை.

பிணக்குகள்

தொகு

தலைப்பு பற்றிய பிணக்கு

தொகு

படத்தின் டைட்டிலை மாற்றும்படி சூர்யா தரப்பில் இருந்து இயக்குனர் ராஜா சுப்பையாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது..[1]. நடிகர் சங்கமும் இதனை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.[2].ஆனால் இயக்குநர் ராஜா சுப்பையா தலைப்பை மாற்ற முடியாது என மறுத்துவிட்டார். "இந்தப் படத்தின் கதைக்கு சரவணன் என்கிற சூர்யா தலைப்பு பொருத்தமாக இருந்ததால் வைத்தோம். படத்தில் நடிகர் சூர்யாவை இழிவு படுத்துவது போல் காட்சிகள் எதுவும் இல்லை. இதே தலைப்பில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நிறைய செலவில் விளம்பரங்களும் செய்துவிட்டோம். இப்போது தலைப்பை மாற்ற முடியாது," என்கிறார் ராஜா சுப்பையா.[2].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணன்_என்கிற_சூர்யா&oldid=3997331" இலிருந்து மீள்விக்கப்பட்டது