ராஜா (2002 திரைப்படம்)

எழில் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜா (Raja (2002 film)) 2002 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதியும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

ராஜா
Raja (2002 film)
ராஜா திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எழில்
தயாரிப்புதிருவேங்கடம்
கதைஎழில்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புஅஜித் குமார்
சோதிகா
பிரியங்கா திரிவேதி
வடிவேலு
கலையகம்Serene Movie Makers.[1]
வெளியீடுJuly 5, 2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தில் அஜித் குமார் 40 நபர்களுடன் மோதும் மாபெரும் சண்டை காட்சியைப் படம் பிடிப்பதற்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி தொடருந்தை நான்கு நாட்களுக்கு 40 இலட்சத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்.[3]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.[4]

எண் பாடல்கள் பாடியவர்(கள்)
1 சின்ன சின்ன ஹரிஹரன்
2 கரிசக் காட்டுப் பூவே சித்ரா
3 வெத்தலக் கொடியே கார்த்திக்
4 நெஞ்செல்லாம் சுனிதா சாரதி
5 ஒரு பௌர்ணமி கே. கே, சுசித்ரா
6 நீ பாக்கின்றாய் சித்ரா

வெளியீடு

தொகு

ராஜா திரைப்படமே அஜித் குமார் கடைசியாக நடித்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு பிறகு அதிரடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jyothika rakes it in". The Hindu. 2002-04-02. Archived from the original on 2003-11-09. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
  2. விஜய்க்கு நான் எழுதி கொண்டிருக்கும் கதை - Director Ezhil | Part 2 – Exclusive Interview. Touring Talkies. 7 February 2020. Archived from the original on 17 December 2021. பார்க்கப்பட்ட நாள் 28 September 2021 – via YouTube.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-06-15. பார்க்கப்பட்ட நாள் 2002-06-15.
  4. "Raja (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 29 July 2015. Archived from the original on 17 March 2023. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  5. http://ajithkumar.free.fr/derniere00.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_(2002_திரைப்படம்)&oldid=3967812" இலிருந்து மீள்விக்கப்பட்டது