எழில் (இயக்குநர்)
(எழில் (இயக்குனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எழில் (Ezhil) தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு இயக்குநர் ஆவார். இவர் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் 1999 வசூல்சாதனை புரிந்தது. இச்சாதனை பெண்ணின் மனதைத் தொட்டு மற்றும் பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களிலும் தொடர்ந்தது. சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்திப் பறவை திரைப்படம் மக்களிடம் சென்றடைந்தது.
எழில் | |
---|---|
பிறப்பு | கயத்தூர் (Kayathur) மயிலாடுதுறை அருகில் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1999 முதல் தற்போது வரை |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர் | குறிப்பு |
---|---|---|---|
1999 | துள்ளாத மனமும் துள்ளும் | விஜய், சிம்ரன் | சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் மாநில விருது]] (இரண்டாவது பரிசு) |
2000 | பெண்ணின் மனதைத் தொட்டு | பிரபுதேவா, ஜெய சீலன் | |
2001 | பூவெல்லாம் உன் வாசம் | அஜித் குமார், சோதிகா | சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் மாநில விருது]] |
2002 | ராஜா | அஜித் குமார், சோதிகா, பிரியங்கா திரிவேதி | |
2005 | அமுதே | ஜெய் ஆகாஸ், மதுமிதா, ப்ரணதி | |
2007 | தீபாவளி | ஜெயம் ரவி, பாவனா | |
2012 | மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) | சிவ கார்த்திகேயன், அத்மியா | |
2013 | தேசிங்கு ராஜா | விமல் (நடிகர்), பிந்து மாதவி | ஆகஸ்டு 23, 2013 வெளியானது |