ராஜா (2002 திரைப்படம்)
ராஜா 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எழில் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும், மற்றும் முன்னணிக் கதாபாத்திரத்தில் பிரியங்கா திரிவேதியும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.
ராஜா | |
---|---|
![]() ராஜா திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எழில் |
தயாரிப்பு | திருவேங்கடம் |
கதை | எழில் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | அஜித் குமார் சோதிகா பிரியங்கா திரிவேதி வடிவேலு |
கலையகம் | Serene Movie Makers.[1] |
வெளியீடு | July 5, 2002 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- அஜித் குமார் - ராஜா
- சோதிகா - பிரியா மகாலட்சுமி
- பிரியங்கா திரிவேதி - பிரியா மகாலட்சுமி
- மந்திரா
- வடிவேலு - சப்பை
- ராதாரவி
- லிவிங்ஸ்டன் - மதி
- வையாபுரி
- சோனு சூட் - பவானி
- தேவன்
தயாரிப்புதொகு
இத்திரைப்படத்தில் அஜித் குமார் 40 நபர்களுடன் மோதும் மாபெரும் சண்டை காட்சியைப் படம் பிடிப்பதற்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி தொடருந்தை நான்கு நாட்களுக்கு ₹40 இலட்சத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்.[2]
பாடல்கள்தொகு
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
எண் | பாடல்கள் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | சின்ன சின்ன | ஹரிஹரன் |
2 | கரிசக் காட்டுப் பூவே | சித்ரா |
3 | வெத்தலக் கொடியே | கார்த்திக் |
4 | நெஞ்செல்லாம் | சுனிதா சாரதி |
5 | ஒரு பௌர்ணமி | கே. கே, சுசித்ரா |
6 | நீ பாக்கின்றாய் | சித்ரா |
வெளியீடுதொகு
ராஜா திரைப்படமே அஜித் குமார் கடைசியாக நடித்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு பிறகு அதிரடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.[3]
ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு
- ↑ "Jyothika rakes it in". The Hindu. 2002-04-02. 2003-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2002-06-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2002-06-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://ajithkumar.free.fr/derniere00.htm