சரஸ்வதி கோயில்

வா்கல் சரஸ்வதி கோயில் (Wargal Saraswati Temple) , அல்லது ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோயில், இந்தியாவின் தெலுங்காணாவில் உள்ள சித்திப்பேட்டை என்னும் மாவட்டதில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். இந்து மதத்தில் கல்வியின் தெய்வமாக சரஸ்வதி தேவியை வணங்குகின்றனர். இது தெலங்கானாவில் உள்ள சரஸ்வதி தேவியின் கோவில்களுல் ஒன்றாகும். இந்த சரஸ்வதி கோயிலை காஞ்சி சங்கர மடம் பராமாிக்கிறது. இந்த சரஸ்வதி தேவி கோயிலானது அறிஞரும், பின்பற்றுபவருமான யயவரம் சந்திரசேகர சா்மாவின் முயற்சியால் கட்டப்பட்டது.

வர்கல் மண்டல்
வர்கல் சரஸ்வதி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலுங்கானா
மாவட்டம்:சித்திப்பேட்டை மாவட்டம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய

கோயில்

தொகு

இந்த கோயில் வா்கல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. அதே மலையடிவாரத்தில் வேறு பல தெய்வங்களின் கோயில்கள் உள்ளன:

  • ஸ்ரீ லட்சுமி கணபதி கோயில்
  • ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோயில்
  • இறைவன் சனி சச்சாரா கோயில்
  • இறைவன் சிவன் கோயில்
  • ஒரு சில வைஷ்ணவ கோயில்கள், இப்போது முற்றிலுமாக சேதமடைந்து, “மோலா விக்ரஹாஸ்” இல்லாமல் காணப்படுகிறது.

பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷரா அபியாசம் (“கற்றல் விழா”) செய்ய கோயிலுக்கு வருகை தருகின்றன. கோவில் வளாகத்தில் அனைத்து பக்தா்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இது நித்ய அன்னதானம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வசந்த பஞ்சமி மற்றும் ஷரத் நவராத்திாி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1] நவராத்திாி முலா நக்ஷத்திரம் (“சரஸ்வதி தேவியின் பிறப்பு நட்சத்திரம்”) சரஸ்வதி தேவியை வணங்குவதற்கான மிகச் சிறந்த நாள் ஆகும். இந்த நாளில், கோவிலில் சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன.

வேத பதசாலா

தொகு

இந்தக் கோவிலில் பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக ஒரு வளாகத்தில் வேத பாடசாலை (வேத பராயண பாரம்பாியத்தில் நிபுணத்துவம் பெற்ற பள்ளி) அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. Indian Natural Wealth. "Temples". Archived from the original on 5 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_கோயில்&oldid=3936117" இலிருந்து மீள்விக்கப்பட்டது