சரஸ்வதி படித்துறை
சரஸ்வதி படித்துறை என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் உள்ள அலகாபாத்தில் உள்ள மிகவும் கண்கவர் படித்துறை ஆகும். இது சிவபெருமானின் மங்காமேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் இந்து தெய்வமும் கல்விக்கடவுளுமான சரஸ்வதியிலிருந்து வந்தது. இது புதிதாக கட்டப்பட்ட இடம். யமுனைநதியின் பச்சை நிற நீருக்கு மூன்று பக்கங்களிலிருந்தும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே ஒரு பூங்கா உள்ளது, இது பச்சை புல்லால் மூடப்பட்டிருக்கும். [1]
சரஸ்வதி படித்துறை | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
அமைவு: | அலகாபாத் |
கோயில் தகவல்கள் |
திரிவேணி சங்கம் அருகே அக்பரின் கோட்டையின் மூலையைச் சுற்றி, இந்த படித்துறை முழுக்க விளக்குகள் ஏற்றி ஒரு இரவு ஆரத்தி நடத்துகிறது. இங்கிருந்து படகு மூலம் சங்கமத்தை அடைய உணவு விடுதி வசதிகளும் உள்ளன.
கயிற்று பாதை வசதி
தொகுகும்பத்திற்கு முன்பாக சங்கம் அருகே யமுனையின் மீது ஒரு கயிற்று பாதை வசதியை அலகாபாத் பெறும் என்று 2017 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. இதற்கான முன்மொழிவை சுற்றுலாத்துறை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
“போட் கிளப் மற்றும் சரஸ்வதி படித்துறை அருகே இரண்டு தளங்கள் இந்த வசதிக்கான திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை அரயில் அருகே உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லும்” என்று பிராந்திய சுற்றுலா அதிகாரி அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறினார். [2] ஆனால் எதுவும் யதார்த்த வடிவத்தை எடுக்கவில்லை மற்றும் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம்.
மேலும் பார்க்கவும்
தொகுஅலகாபாத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பட்டியல்