சரஸ்வதி ராம்நாத்

சரஸ்வதி ராம்நாத் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவர் இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்தும் இந்திக்கும் செய்த மொழிபெயர்ப்புக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.[1] சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப் படைப்புக்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது. படைப்பிலக்கியத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை. மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பாக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் இந்நிலை நீடிக்கத்தான் செய்யும். ஏன் என்பதற்கு என்னிடம் நீண்ட பெருமூச்சுதான் பதில் என்று தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை குறித்து கருத்து கூறி உள்ளார்.[2]

விருதுகள்தொகு

  • பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களை, இந்திய மொழி நாடகங்கள் என்ற தலைப்பில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமையை சாகித்திய அகாதமி பாராட்டி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம் ஆண்டில் வென்றார்.[3]

படைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. மொழிபெயர்ப்புக் "கலைச்செல்வி'!
  2. மொழிபெயர்ப்புக் "கலைச்செல்வி'!
  3. மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதுகள் பெற்றவர்கள் விவரம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_ராம்நாத்&oldid=3243229" இருந்து மீள்விக்கப்பட்டது