சரிதா சௌத்ரி

சரிதா கேத்தரின் லூயிஸ் சௌவுத்ரி என்கிற சரிதா கேத்தரின் லூயிஸ் சௌவுத்ரி (Sarita Catherine Louise Choudhury) 1966 ஆகஸ்ட் 18 இல் பிறந்த ஒரு பிரித்தானிய இந்திய நடிகையாவார். மீரா நாயர் இயக்கிய மிஸ்ஸிஸிப்பி மசாலா (1992), பெரேஸ் ஃபேமிலி (1995) காம சூத்ரா: எ டேல் ஆப் லவ் ( 1996) போன்ற சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1990 களின் பிற்பகுதியில், எ பெர்ஃபர்ட் மர்டர், 3 ஏ.எம் என்றப் படத்தில் துணைப் பாத்திரங்களில் இவர் நடித்தார். ஜான் காசாவேட்ஸ் இயக்கிய குளோரியா என்ற படத்தில் மறு ஆக்கத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில், ஜஸ்ட் எ கிஸ் திரைப்படத்தில் நடித்தார். இசுபைக் லீயின் இயக்கத்தில் ஷீ ஹேட் மீ என்ற படத்தில் இவர் ஒரு லெஸ்பியன் பாத்திரத்திலும், 2006 ஆம் ஆண்டில் எம் நைட் ஷியாமளன் இயக்கிய லேடி இன் த வாட்டர் என்றப் படத்தில் அனா ரான் என்ற வேடத்திலும் நடித்துள்ளார்.[2][3] மேலும் அவர் தி ஹங்கர் கேம்ஸ்: மோக்கிங்ஜே பகுதி 2 மற்றும் டாம் ஹாங்க்ஸுடன் இணைந்து 2016 இல் ஏ ஹோலோகிராம் ஃபார் த கிங் என்றத் திரைப்படத்திலும் நடித்தார்.

சரிதா சௌத்ரி
சௌத்ரி டிரைபெக்கா திரைப்படவிழாவில், 2010
பிறப்புசரிதா கேத்தரின் லூயிஸ் சௌவுத்ரி
18 ஆகத்து 1966 (1966-08-18) (அகவை 58)
பிளாக்ஹீத், லண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990 முதல் தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சௌத்திரி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பிளாக்ஹீத் என்ற இடத்தில் பிறந்தார், அரை பெங்காலி இந்திய மற்றும் அரை ஆங்கிலேய வம்சத்தில் பிறந்தார். அவரது பெற்றோர், ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த ஜூலியா பாட்ரிஷியா மற்றும் இந்திய வங்காள வம்சத்தின் விஞ்ஞானி பிரபாஸ் சந்திர சௌத்ரி ஆவார்கள், இவர்கள் இருவரும் 1964 ல் ஜமைக்கவின் லூசியாவில் திருமணம் செய்து கொண்டார்கள். கனடாவின் ஒன்டாரியோவின் கிண்டன்ஸ்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் திரைப்படத்தைப் படித்தார். அவருக்கு குமார் மைக்கேல் சௌத்ரி என்கிற ஒரு இளைய சகோதரரும்,சந்திர பால் சௌத்ரி என்கிற ஒரு மூத்த சகோதரரும் உள்ளானர்.[4][5]

தொழில்

தொகு

1990 ஆம் ஆண்டு மிஸ்ஸிஸிப்பி மசாலா திரைப்படத்தில் டென்செல் வாஷிங்டனுக்கு எதிராக சௌத்ரி நடித்தார், அவருக்கு ஸ்க்ரீன்ஆக்டர்ஸ் கில்ட் (SAG) அட்டை கிடைத்தது.[6] மன்ஹாட்டனின் ஈஸ்ட் வில்லேஜ் திரைப்படத்தில் திரையரங்குகளில் வெளிவந்த பின்னரும் இவர் உணவு விடுதுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.[6] அவரது முதல் படம் மிஸ்ஸிஸிப்பி மசாலா ஒரு வெற்றிப் படமாக மாறிய பிறகு, சரிதா சௌத்ரி, பில்லி ஆகஸ்டின் த ஹவுஸ் ஆப் த ஸ்பிரிட்ஸின் தழுவல் படத்தில் ஒரு சிலி நாட்டு பணிப்பெண்ணாக (1992), மற்றும் லெஸ்பியன் தாயாக ஃபிரெஷ் கில் படத்திலும் நடித்துள்ளார்..

குறிப்புகள்

தொகு
  1. "I only do nudity when I trust the director". Rediff.
  2. "Sarita Choudhury on Getting Involved in the Spy Side of 'Homeland'".
  3. "Sarita Choudhury Talks Working with Tom Hanks in A Hologram for the King: It Made My Parents 'Proud'".
  4. "From Queen's to Homeland". Queen's University. 2013. Archived from the original on 2 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  5. "Sarita Choudhury".
  6. 6.0 6.1 "How Did You Get Your SAG-AFTRA Card?" TV Guide. 13 January 2014. p. 10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா_சௌத்ரி&oldid=3924346" இலிருந்து மீள்விக்கப்பட்டது