மீரா நாயர் (அக்டோபர் 15, 1957 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநில ரூர்கெலாவில் பிறந்தார்) நியூ யார்க்கில் இருக்கும் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.[1] மீராபாய் பிலிம்ஸ் அவருடைய தயாரிப்பு நிறுவனமாகும்.

மீரா நாயர்

பிறப்பு அக்டோபர் 15, 1957 (1957-10-15) (அகவை 66)
ராவுர்கேலா, ஒரிசா, இந்தியா
தொழில் இயக்குனர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1986–தற்போது வரை
துணைவர் மிட்ச் எப்ஸ்டெயின் (மணமுறிவு)
முகமது மன்டானி (1988–தற்போது வரை)

அவர் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பெற்றார். அவருடைய முதல் சலனப்படமான சலாம் பாம்பே! (1988), கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதினைப் பெற்றது மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான அகாடெமி விருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. அந்தத் திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை அவர், இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.[2] அவர் அவ்வப்போது தன்னுடைய நீண்டகால படைப்பாற்றல் திறன்கொண்ட உடனுழைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரெவாலாவுடன் பணியாற்றுகிறார், இவரை அவர் ஹார்வர்ட்டில் சந்தித்தார்.

தேசிய திரைப்பட விருது மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார், மேலும் அகாடெமி விருதுகள், கோல்டன் குளோப்ஸ், BAFTA விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2007 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதினையும் பெற்றுள்ளார், இந்த விருதினை வழங்கியவர் இந்திரா நூயி, தலைவர் மற்றும் முக்கிய செயல் அதிகாரி, பெப்சிகோ இன்க், மற்றும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2006 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்.[3]

அவருடைய மிகச் சமீபத்திய திரைப்படங்களில் அடங்குபவை, ரீஸெ வித்தெர்ஸ்பூன் உடன் இணைந்து எடுத்த வானிடி ஃபேர் , தி நேம்சேக், மற்றும் அமெலியா .[1]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும் தொகு

மீரா நாயர் ஒரிசா மாநிலத்தின் ரூர்கெலாவில் பிறந்தார்,[4] அங்கு அவருடைய தந்தை வேலையில் இருந்தார். ஒரு மத்தியதர குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் அவர் தான் இளையவர். அவருடைய தந்தை ஒரு ஆட்சி அலுவலர், தாய் ஒரு சமூக சேவகர்.

மீரா தன்னுடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பை ஹிமாச்சல பிரதேச ஷிம்லாவின் போர்டிங் பள்ளியான லோரெடோ கான்வெண்ட் தாரா ஹாலில் மேற்கொண்டார். அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் சமூகவியலைப் படித்தார், அங்கு அவர் அரசியல் வீதி நாடகத்துடன் ஈடுபட்டு ஒரு அமெச்சூர் நாடகக் கம்பெனியில் மூன்றாண்டுகள் செயல்பட்டு வந்தார். 1976 ஆம் ஆண்டில், 19 வயதாகும்போது ஹார்வர்ட்டில் ஸ்காலர்ஷிப் பெற்று யு.எஸ்ஸுக்குச் சென்றார்[5], அங்கு அவர் தன் படிப்பை சமூகவியலில் தொடர்ந்தார்.[6] ஹார்வர்டில் இருக்கும்போது அவர் தன்னுடைய கணவர், புகைப்படக்காரர் மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் தன்னுடைய திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரேவாலா ஆகியோரைச் சந்தித்தார் பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுப்பதில் ஈடுபட்டார்.

தொழில் வாழ்க்கை தொகு

ஒரு திரைப்படக் கலைஞராக அவர் தன்னுடைய தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், நாயர் நான்கு தொலைக்காட்சி ஆவணப்படங்களை இயக்கினார். மும்பை இரவுவிடுதி ஒன்றில் இருக்கும் ஆடை கலைபவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படமான இண்டியா கேப்ரே , 1986 ஆம் ஆண்டின் அமெரிக்கத் திரைப்பட விழாவில் ப்ளூ ரிப்பன் விருதினைப் பெற்றது. ஸலாம் பாம்பே! (1988), சூனி தாராபொரேவாலாவின் திரைக்கதையுடன் அது, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்காக அகாடெமி விருதுக்கு நியமனம் செய்யப்பட்டதுடன் இதர விருதுகள் பலவற்றைப் பெற்றது. இன்று அது ஒரு முன்மாதிரி திரைப்பட கிளாசிக்காக கருதப்படுகிறது, மேலும் திரைப்பட மாணவர்களுக்கு அது ஒரு தரநிர்ணயமாக இருக்கிறது.

1991 ஆம் ஆண்டு திரைப்படமான மிஸ்ஸிஸிப்பி மசாலாவில் டென்சில் வாஷிங்க்டன் மற்றும் சரிதா சௌத்ரி நடித்திருந்தார்கள், அந்தத் திரைப்படம் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டு வேலைசெய்யும், நாடிழந்த ஒரு உகாண்டா நாட்டு-இந்தியக் குடும்பத்தின் வாழ்க்கைக் குறிப்பினைக் கொண்டிருந்தது. திரைக்கதை மீண்டும் சூனி தாராபோரேவாலா அவர்களால் இயற்றப்பட்டு, மைக்கெல் நோசிக் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டில், கிறிஸ்டைன் பெல் அவர்களின் புத்தகமான தி பெரெஸ் ஃபேமலி யின் திரைப்படத் தழுவல் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் மாரிசா டோமீய், ஆல்ஃப்ரெட் மோலினா, மற்றும் ஆஞ்சலிகா ஹஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர், இந்தத் திரைப்படமும் மைக்கேல் நோஸிக் அவர்களால் தயாரிக்கப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தூண்டுதல் திரைப்படம் Kama Sutra: A Tale of Love அதற்கும் கூட அவர் இயக்குநராக இருந்தார். நவீன் ஆண்ட்ரூஸ் நடித்த மை ஓன் கண்ட்ரி , ஹெச்பிஓ பிலிம்ஸ்க்காக தயாரிக்கப்பட்டது, சூனி தாராபோரேவாலாவின் ஆப்ரஹம் வர்கீஸின் நினைவுகளிலிருந்து தழுவப்பட்டது.

இன்றைய தேதி வரையில் நாயரின் மிகப் பிரபலத் திரைப்படமான மான்சூன் வெட்டிங் (2001), ஒரு தாறுமாறான பஞ்சாபி இந்தியத் திருமணம் பற்றியது, இதற்குத் திரைக்கதை அமைத்தவர் சபரினா தவான், இந்தத் திரைப்படத்திற்கு, வெனீஸ் திரைப்பட விழாவில் மிகவும் கௌரவமான தங்க சிங்கம் விருது வழங்கப்பட்டது. நாயர்தான் இந்த விருதினைப் பெறும் முதல் பெண்மணி.[7] தாக்கரேவின் வேனிடி ஃபேர் நாவலுக்கான நாயரின் 2004 ஆம் ஆண்டு பதிப்பில் ரியெஸ்ஸெ வித்தெர்ஸ்பூன் நடித்திருந்தார்.

அவருடைய திரைப்படம் தி நேம்சேக் , 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் டார்ட்மௌத் கல்லூரியில் முதல்முறையாக திரையிடப்பட்டது, அங்கு நாயருக்கு டார்ட்மௌத் திரைப்பட விருது வழங்கப்பட்டது. மற்றொரு வெளியீடு 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் நியூ யார்க்கில் இண்டோ-அமெரிக்கன் கல்ச்சரல் கௌன்சிலில் நடைபெற்றது. புலிட்ஸெர் பரிசு பெற்ற ஜும்பா லஹிரியின் நாவலிலிருந்து சூனி தாராபோரேவாலாவால் தழுவப்பட்ட தி நேம்சேக் மார்ச் 2007 இல் வெளியானது.

அவருடைய சமீபத்திய திட்டமானது மாயிஷா, இது கிழக்கு ஆப்பிரிக்கர்கள் மற்றும் தெற்கு ஆசியர்கள், திரைப்படங்கள் தயாரிப்பைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான ஒரு திரைப்பட பரிசோதனைக் கூடம்.[8] உகாண்டாவின் கம்பாலாவிலுள்ள நாயரின் வீட்டில் மாய்ஷா தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது.

நியூ யார்க்கில் அமைந்த காதல் கதைத் தொகுப்பின் ரோமாண்டிக் டிராமாவான நியூயார்க், ஐ லவ் யூ என்னும் குறும்படத்தையும், மைக்ரேஷன் என்று பெயரிடப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு (இது கேட்ஸ் ஃபௌண்டேஷனால் நிதியளிக்கப்பட்டிருந்தது) பற்றிய ஒரு 12 நிமிட திரைப்படத்தையும் அவர் இயக்கினார்.[9][10]

2007 ஆம் ஆண்டில், திரைப்படத் துறைக்கு நாயர் புரிந்த சேவையைப் பாராட்டி, ஒன்பதாவது பாலிவுட் திரைப்பட விருதுகளின்போது ப்ரைட் ஆஃப் இண்டியா விருதினை வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.[11][12]

அவருடைய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான அமெலியா அக்டோபர் 2009 இல் வெளியிடப்பட்டு பெரும்பாலும் எதிர்மாறான விமர்சனங்களையே கொண்டிருந்தது.[13][14]

ஜான்னி டெப்-நடிக்கும் பெரிய பட்ஜெட் திரைப்படமான சாந்தாராம் உட்பட இந்தியா, யு.கே மற்றும் ஒருவேளை ஆஸ்திரேலியாவிலும் நாயர் பல முடிக்கப்படாத திட்டங்களை வைத்திருக்கிறார். ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா, கிழக்கின் நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டுவரை வரை நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக தயாரிப்பு தாமதப்பட்டது. சாந்தாராம் முடிவுக்கு வந்துவிடவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டில் அதன் தயாரிப்பு தொடங்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நாயர் தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்கால திரைப்படமான இம்ப்ரஷனிஸ்ட் 1920 ஆம் ஆண்டுகளின் அரசு புலத்தில் உருவாகும் கதையாக இருக்கும். மோஹ்சின் ஹமித்தின் 2007 ஆம் ஆண்டு நாவலான தி ரிலக்டண்ட் ஃப்ண்டமென்டலிஸ்ட் டுக்கான உரிமையையும நாயர் வாங்கிவைத்திருக்கிறார், அதனுடைய திரைப்பட தழுவல் 2009 ஆம் ஆண்டு வேனிற்காலத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.[15]

சொந்த வாழ்க்கை தொகு

நாயர், நியூ யார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் வசித்து வருகிறார், அங்கு அவர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் திரைப்பட பிரிவில் இணை பேராசிரியராக இருக்கிறார், அவருடைய கணவரான, பேராசிரியர் மஹ்மூத் மம்தானியும் அங்கு பாடம் எடுக்கிறார்.[16][17] நாயர் மற்றும் அவருடைய கணவர் 1988 ஆம் ஆண்டில் முதலில் சந்தித்தனர், அப்போது அவர் மிஸ்ஸிஸிப்பி மசாலா திரைப்படத்திற்கான ஆராய்ச்சிக்காக முதன் முறையாக உகாண்டா சென்றிருந்தார்.[5] நாயர் பத்தாண்டு காலமாக ஒரு ஆர்வம்மிக்க யோகா பழகுனராக இருந்துவருகிறார்; திரைப்படத்தைத் தயாரிக்கும்போது அவர் தன்னுடைய நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களை யோகா அமர்வுடன் அன்றைய நாளைத் தொடங்குமாறு செய்வார்.[18] நாயருக்கு ஸோஹ்ரான் மம்தானி என்னும் ஒரு மகன் இருக்கிறான்[19] 1991 ஆம் ஆண்டில் பிறந்த இவன், தற்போது ப்ராங்க்ஸ் ஹை ஸ்கூல் ஆஃப் சைன்ஸில் படித்து வருகிறான்.

திரைப்படப் பட்டியல் தொகு

 • ஜமா ஸ்ட்ரீட் மஸ்ஜித் ஜர்னல் (1979)
 • சோ ஃபார் ஃப்ரம் இண்டியா (1982)
 • இண்டியா கேபரெ (1985)
 • சில்ட்ரன் ஆஃப் எ டிஸைர்ட் செக்ஸ் (1987)
 • சலாம் பாம்பே! (1988)[1]
 • மிஸ்ஸிஸிப்பி மசாலா (1991)[1]
 • தி டே தி மெர்சிடெஸ் பிகேம் எ ஹாட் (1993)
 • தி பெரெஸ் ஃபாமிலி (1995)[1]
 • Kama Sutra: A Tale of Love (1996)[1]
 • மை ஓன் கண்ட்ரி (1998) (ஷோடைம் டிவி)
 • மான்சூன் வெட்டிங் (2001)[1]
 • ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ் (2002)[1]
 • 11'9"01 செப்டம்பர் 11 (பிரிவு - "இண்டியா") (2002)[1]
 • ஸ்டில், தி சில்ட்ரன் ஆர் ஹியர் (2003)
 • வேனிடி ஃபேர் (2004)[1]
 • தி நேம்சேக் (2006)[1]
 • மைக்ரேஷன் (எய்ட்ஸ் ஜாகோ) (2007)[1]
 • நியூயார்க், ஐ லவ் யூ (பிரிவு - "கோஷெர் வெஜிடேரியன்") (2008)[1]
 • 8 (பிரிவு - "ஹௌ கான் இட் பி?") (2008)[1]
 • அமெலியா (2009)[1]

விருதுகள் தொகு

வெற்றிகள் தொகு

 • 1985: சிறந்த ஆவணப் படம், குளோபல் வில்லேஜ் திரைப்பட விழா: இண்டியா கேபரே
 • 1986: கோல்டன் ஏதனா, ஏதன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: இண்டியா கேபரே
 • 1986: ப்ளூ ரிப்பன், அமெரிக்கத் திரைப்பட விழா: இண்டியா கேபரே
 • 1988: பார்வையாளர் விருது, கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே!
 • 1988: கோல்டன் கேமரா (சிறந்த முதல் படம்), கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே!
 • 1988: இந்தியில் சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருது]]: சலாம் பாம்பே! [20]
 • 1988: முதல் இடத்து வெளிநாட்டு திரைப்படங்களுக்கான நேஷனல் போர்ட் ஆஃப் ரிவியூ அவார்ட் சலாம் பாம்பே!
 • 1988: மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில் "ஜூரி விருது", "மிகப் பிரபலத் திரைப்படம்" மற்றும் "ஈகுமெனிகல் ஜூரியின் விருது": சலாம் பாம்பே!
 • 1988: புதிய தலைமுறை விருது லாஸ் ஏஞ்செல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் அமைப்பு விருதுகள்
 • 1988: லிலியன் கிஷ் விருது (முழு நீளத் திரைப்படத்தில் சிறப்புடைமை), திரைப்பட விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்மணி: சலாம் பாம்பே!
 • 1991: கோல்டன் ஓசெல்லா (சிறந்த அசல் திரைக்கதை), வென்னிஸ் திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா (சூனி தாராபோரேவாலாவுடன்)[21]
 • 1991: விமர்சகர்கள் சிறப்பு விருது, சாவோ பௌலோ சர்வதேச திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா
 • 1992: சிறந்த இயக்குநர் (வெளிநாட்டுத் திரைப்படம்), இடாலியன் நேஷனல் சிண்டிகேட் ஆஃப் பிலிம் ஜர்னலிஸ்ட்ஸ்]: மிஸ்ஸிஸிப்பி மசாலா
 • 1992: ஆசிய ஊடக விருது, ஆசிய அமெரிக்க சர்வதேச திரைப்பட விழா
 • 1993: சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான இன்டிபெண்டெண்ட் ஸ்பிரிட் அவார்ட் : மிஸ்ஸிஸிப்பி மசாலா
 • 2000: சிறப்புக் குறிப்பு (ஆவணப்படம் மற்றும் கட்டுரை), பையார்ரிட்ஸ் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் ஆடியோவிஷுவல் புரோகிராமிங்: தி லாஃபிங் கிளப் ஆஃப் இண்டியா
 • 2001: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
 • 2001: லாடெர்னா மாஜிகா ப்ரைஸ் வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
 • 2002: பார்வையாளர் விருது, கான்பெர்ரா சர்வதேச திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
 • 2002: சர்வதேச திரைப்படத்திற்கான சிறப்பு விருது, ஜீ சினி அவார்ட்ஸ்: மான்சூன் வெட்டிங்
 • 2002: யுனெஸ்கோ விருது, வெனிஸ் திரைப்பட விழா: 11'9"01 செப்டம்பர் 11
 • 2004: ஃபெய்த் ஹப்லீ வெப் ஆஃப் லைஃப் அவார்ட், ரோசெஸ்டர்-ஹை ஃபால்ஸ் சர்வதேச திரைப்பட விழா
 • 2007: "கோல்டன் அப்ரோடைட்", லவ் ஈஸ் ஃபோல்லி சர்வதேச திரைப்பட விழா (பல்கேரியா): தி நேம்சேக்

நியமனங்கள் தொகு

 • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதெமி விருது: சலாம் பாம்பே!
 • 1989: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீஸர் விருது (Meilleur film étranger ): சலாம் பாம்பே!
 • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது]]: சலாம் பாம்பே!
 • 1990: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்]]: சலாம் பாம்பே!
 • 1990: பிலிம்ஃபேர் சிறந்த இயக்குநர் விருது: சலாம் பாம்பே!
 • 1990: பிலிம்ஃபேர் சிறந்த திரைப்பட விருது: சலாம் பாம்பே!
 • 1991: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விருது: மிஸ்ஸிஸிப்பி மசாலா
 • 1996: கோல்டன் சீஷெல், சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழா: Kama Sutra: A Tale of Love
 • 1999: சிறந்த திரைப்படம், வெர்ஸௌபெர்ட் இண்டர்நேஷனல் கே & லெஸ்பியன் பிலிம் ஃபெஸ்டிவல்: மை ஓன் கண்ட்ரி
 • 2001: ஸ்க்ரீன் இண்டர்நேஷனல் அவார்ட் (சிறந்த ஐரோப்பியமல்லாத திரைப்படம்), ஐரோப்பிய திரைப்பட விருதுகள்: மான்சூன் வெட்டிங்
 • 2001: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: மான்சூன் வெட்டிங்
 • 2002: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: மான்சூன் வெட்டிங்
 • 2003: சிறந்த இயக்குநருக்கான க்ளோட்ருடிஸ் விருது: மான்சூன் வெட்டிங்
 • 2003: கோல்டன் ஸ்டார், இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மார்ராகெச்: ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ்
 • 2003: ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்த சிறந்த திரைப்படத்திற்கான சீஸர் விருது: 11'9"01 செப்டம்பர் 11
 • 2004: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: வேனிடி ஃபேர்
 • 2007: சிறந்த திரைப்படத்திற்கான கோதம் விருது: தி நேம்சேக்

மேலும் படிக்க தொகு

 • ஜிக்னா தேசாய்: பியாண்ட் பாலிவுட்: தி கல்சுரல் பாலிடிக்ஸ் ஆஃப் சௌத் ஏஷியன் டையாஸ்போரிக் பிலிம் . நியூ யார்க்: ரௌட்லெட்ஜ், 2004, 280 பக். இல். ஐஎஸ்பிஎன் 0-415-96684-1 (இன்ப்.) / ஐஎஸ்பிஎன் 0-415-96685-X (hft.)
 • கீதா ராஜன்: பிளையண்ட் அண்ட் கம்ப்ளெய்ண்ட்: கோலோனியல் இண்டியன் ஆர்ட் அண்ட் போஸ்ட்காலோனியல் சினிமா . வுமன் . ஆக்ஸ்ஃபோர்ட் (அச்சு), ஐஎஸ்பிஎன் 0957-4042 ; 13(2002):1, பக். 48–69.
 • அல்பனா ஷர்மா: பாடி மாட்டர்ஸ்: தி பாலிடிக்ஸ் ஆஃப் ப்ரோவோகேஷன் இன் மீரா நாயர்ஸ் பிலிம்ஸ் . QRFV : குவார்டர்லி ரிவியூ ஆஃப் பிலிம் அண்ட் வீடியோ , ஐஎஸ்பிஎன் 1050-9208 ; 18(2001):1, பக். 91–103.
 • பிரதிபா பார்மார்: மீரா நாயர்: பிலிம்மேகிங் இன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் பாம்பே . ஸ்பேர் ரிப் , ஐஎஸ்பிஎன் 0306-7971; 198, 1989, பக். 28–29.
 • க்வாண்டோலின் அவுட்ரே ஃபோஸ்டர்: வுமன் பிலிம்மேக்கர்ஸ் ஆஃப் தி ஆஃப்ரிகன் அண்ட் ஏஷியன் டையாஸ்போரா: டீகாலோனைசிங் தி கேஸ், லொகேடிங் சப்ஜக்டிவிடி . கார்போண்டேல், இல்.: சதர்ன் இல்லிநாய்ஸ் யூனிவர்சிடி பிரஸ், 1997. ஐஎஸ்பிஎன் 0-8093-2120-3.
 • ஜான் கென்னெத் முய்ர்: மெர்சி இன் ஹெர் ஐஸ்: தி பிலிம்ஸ் ஆஃப் மீரா நாயர் . ஹால் லியானார்ட், 2006. ஐஎஸ்பிஎன் 1557836493, 9781557836496.

குறிப்புதவிகள் தொகு

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 http://www.imdb.com/name/nm0619762/
 2. Crossette, Barabara (1990-12-23). "Homeless and Hungry Youths of India". NewYork Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9C0CE0DA1531F930A15751C1A966958260. பார்த்த நாள்: 2008-10-13. 
 3. மீரா நாயர் ஈஸ் இண்டியா அப்ரோட் பெர்சன் ஆஃப் தி இயர் 2007 நியூஸ், ரீடிஃப்.காம் , மார்ச் 29, 2008.
 4. 'நேம்சேக், ரித்விக் கடக்கிற்கான ஒரு காணிக்கை', என்கிறார் மீரா நாயர் - மீரா நாயர் பேட்டி இண்டியன் எக்ஸ்பிரஸ் , மே 22, 2005.
 5. 5.0 5.1 நேம்சேக் பேட்டி நியூஸ் , ரீடிஃப்.காம் , மார்ச் 21, 2007.
 6. "Mira Nair". The South Asian Women's NETWork. பார்க்கப்பட்ட நாள் 2008-10-13.
 7. Anna Whitney (10 September 2001). "Indian director is first woman to win Golden Lion". The Independent (London) இம் மூலத்தில் இருந்து 9 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110309042657/http://www.independent.co.uk/arts-entertainment/films/news/indian-director-is-first-woman-to-win-golden-lion-668799.html. பார்த்த நாள்: 8 December 2009. 
 8. "மாய்ஷா பிலிம் லாப்". Archived from the original on 2005-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
 9. "மீரா நாயரின் சமீபத்திய திரைப்பட திட்டம் இந்திய சினிமா கூடங்களுக்கான செய்தியைக் கொண்டு செல்கிறது". Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2008-02-14.
 10. "Migration". Jaman. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-13.
 11. 'ப்ரைட் ஆஃப் இண்டியா' விருதினை வழங்கி பாலிவுட் மீரா நாயரை கௌரவிக்கவுள்ளது பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் , ஏப்ரல் 23, 2007.
 12. "Mira Nair, Asha Parekh honoured at Bollywood awards in New York". Malaysia Sun. 28 May 2007. Archived from the original on 7 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 13. " 'அமெலியா' (2009): விமர்சனங்கள்." மெடாகிரிடிக் .
 14. " 'அமெலியா' விமர்சனங்கள், திரைப்படங்கள்." ராட்டன் டொமேடோஸ், ஐஜிஎன் எண்டர்டெய்ன்மெண்ட் .
 15. Debesh Bannerjee (8 December 2009). "'Politeness can kill you in movies'". Screen. பார்க்கப்பட்ட நாள் 8 December 2009.
 16. ஃபாகல்டி பரணிடப்பட்டது 2006-04-30 at the வந்தவழி இயந்திரம் கொலம்பியா யூனிவர்சிடி ஸ்கூல் ஆஃப் தி ஆர்ட்ஸ்
 17. Solomon, Deborah (29 August 2004). "All's Fair". The New York Times. http://www.nytimes.com/2004/08/29/magazine/29QUESTIONS.html?ex=1224475200&en=6b81f2be99b9a74c&ei=5070. பார்த்த நாள்: 27 March 2010. 
 18. "இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரைபூனுடன் மீரா நாயரின் பேட்டி". Archived from the original on 2009-12-28. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
 19. Miller, Winter (2007-03-18). "Personal Sound Effects: A Night Out with Mira Nair". NewYork Times. http://www.nytimes.com/2007/03/18/fashion/18nite.html?pagewanted=print. பார்த்த நாள்: 2008-10-13. 
 20. விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .
 21. மிஸ்ஸிஸிப்பி மசாலா - விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மீரா நாயர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_நாயர்&oldid=3897530" இலிருந்து மீள்விக்கப்பட்டது