அசுடோரியா, குயின்சு

அசுடோரியா (Astoria, அஸ்டோரியா) நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவின் வடமேற்குப் பகுதியிலுள்ள நடுத்தர மக்கள் மற்றும் வணிகமய புறநகர் பகுதியாகும். இங்கு 154,000 மக்கள் வாழ்கின்றனர்.[2] இதன் கிழக்கு ஆற்றை எல்லையாகக் கொண்டுள்ளது; குயின்சு பரோவின் மற்ற புறநகரங்களான நீள்தீவு நகரம், சன்னிசைடு, உட்சைடு புறநகரங்களை அடுத்துள்ளது.[3]

அஸ்டோரியா
குயின்சு புறநகரங்கள்
அசுடோரியாவில் 30வது நிழற்சாலைக்கும் 31வது நிழற்சாலைக்கும் இடையேயுள்ள 36வது சாலை
அசுடோரியாவில் 30வது நிழற்சாலைக்கும் 31வது நிழற்சாலைக்கும் இடையேயுள்ள 36வது சாலை
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்நியூ யோர்க் மாநிலம்
நகரம்நியூயார்க் நகரம்
பரோகுயின்சு
ஐரோப்பியர் குடியேற்றம்1659
பெயர்ச்சூட்டுஜான் ஜேகப் அஸ்டோர்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,54,000
இனம்
 • வெள்ளையர்47.0%
 • கருப்பர்4.1%
 • எசுப்பானியர்26.6%
 • ஆசியர்14.2%
 • பிறர்N/A
சிப் குறியீடு
11101–11106
இடக் குறியீடு(கள்)718, 347, 917தொலைபேசிக் குறியீடு

மக்கள்தொகையியல்

தொகு
 
30வது நிழற்சாலை, அசுடோரியா, குயின்சு, நியூயார்க் நகரம்
 
அசுடோரியாவில் 33வது சாலையில் 31வது நிழற்சாலை

அசுடோரியாவில் முதன்முதலில் 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்ககாரர்களும் செருமானியரும் குடியேறினர். 19வது மற்றும் துவக்க இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஐரிய புலம்பெயர் மக்கள் இங்கு குடியேறினர். அடுத்து பெருமளவில் இத்தாலியர்கள் இங்கு குடிபெயர்ந்தனர். பல இத்தாலிய உணவகங்கள், அடுமனைகள், பிட்சா கடைகளை நிறுவினர். குறிப்பாக இக்கடைகளை திட்மார்சு புலேவார்டில் காணலாம்.

அமெரிக்க யூதர்களும் குறிப்பிட்டளவில் இங்கு வாழ்கின்றனர். வரலாற்றிடங்களுக்கான தேசிய பதிவேட்டில் இடம்பெற்றுள்ள அசுடோரியா இசுரேல் மையம் 1925இல் கட்டப்பட்டது. முன்னதாக 1904இல் கட்டப்பட்ட மிஷ்கான் இசுரேல் பிரார்த்தனைக் கூடம் வளர்ந்து வந்த யூதர்களின் தேவையை சந்திக்க இயலாததால் புதிய மையம் கட்டப்பட்டது.[4]

1960களில் பெருமளவில் கிரேக்கத்திலிருந்து பலர் இங்கு குடியேறினர்; அவ்வாறே 1974இல் சைப்பிரசிலிருந்து பலர் புலம் பெயர்ந்தனர். இங்குள்ள பல கிரேக்க உணவகங்கள், அடுமனைகள், மதுவகங்கள், மற்றும் கிரேக்க மரபுவழித் தேவாலயங்கள் கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கத்திற்கு சான்றுகளாக உள்ளன. 1980இல் அசுடோரியாவிலுள்ள கிரேக்கர்களின் எண்ணிக்கை 22,579ஆக இருந்தது; இது வந்தேறிகளின் எண்ணிக்கை மற்றும் குடிப்பிறப்புகள் குறைந்ததால் 1990இல் 18,127க்கு இறங்கியது.[5] அண்மைய கிரேக்க நாட்டுப் பொருளியல் சிக்கல்களை அடுத்து மீண்டும் ஆயிரக்கணக்கில் கிரேக்கர்கள் குடியேறியத் துவங்கியுள்ளனர்.[6]

அசுடோரியாவில் கிட்டத்தட்ட 20,000 மால்ட்டா அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலரும் தற்போது வேறிடங்களுக்கு குடிபெயறத் துவங்கியுள்ளனர்.

1970களின் மத்தியிலிருந்து, இங்குள்ள அராபியர்களின் மக்கள்தொகை கூடி வருகின்றது; லெபனான், எகிப்து, சிரியா, யெமன், தூனிசியா, மொரோக்கோ, அல்சீரியா நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ளனர். 1990களில், 28வது நிழற்சாலைக்கும் அசுடோரியா புலேவார்டுக்கும் இடையே உள்ள இசுடீன்வே சாலையில் பல அராபியக் கடைகள், உணவகங்கள் நிறுவப்பட்டன; இப்பகுதி உள்ளூர் மக்களிடையே "லிட்டில் எகிப்து" என அறியப்படுகின்றது.

1990களில் கணிசமான தென் அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் குடியிருக்கத் தொடங்கினர். 36வது நிழற்சாலைப் பகுதியில் பிரேசிலியர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அல்பேனியர்கள், பல்கேரியர்கள், and பொசினியர்களின் மக்கள்தொகை வளர்ந்து வருகின்றது. பல எசுப்பானிய அமெரிக்கர்களும் அசுடோரியாவில் வாழ்கின்றனர்.

இங்கு வாழ்ந்திருந்த பெரும்பாலான வங்காளதேச அமெரிக்கர்கள் 2001இல் டெட்ராய்ட் பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் வங்காளதேசத்திலிருந்து புதிதாக இங்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது.[7]

மேற்சான்றுகள்

தொகு
  1. 2000 Census
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  3. "NYPD - Precincts". பார்க்கப்பட்ட நாள் 24 April 2016.
  4. "Greater Astoria Historical Society - Events". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Williams, Solange; Stephanie Mejia (2001). "Astoria: 'A Little Greece' in New York". New York University. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  6. "New wave of Greeks flocking to Astoria". NY Daily News. பார்க்கப்பட்ட நாள் 2015-12-18.
  7. Kershaw, Sarah. "Queens to Detroit: A Bangladeshi Passage." த நியூயார்க் டைம்ஸ். March 8, 2001. Retrieved on February 28, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அஸ்டோரியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுடோரியா,_குயின்சு&oldid=3926994" இலிருந்து மீள்விக்கப்பட்டது