குயின் ஆஃப் கேட்வே

2016 ஆண்டு மீரா நாயர் இயக்கியத் திரைப்படம்

குயின் ஆஃப் கேட்வே (Queen of Katwe) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க வாழ்க்கை வரலாற்று விளையாட்டு நாடகத் திரைப்படம் ஆகும். [4] வில்லியம் வீலர் திரைக்கதை எழுதி, மீரா நாயர் இயக்கியுள்ளார்.[5] டேவிட் ஓயெலோவோ, லூபிடா நியாங்கோ, மதீனா நல்வாங்கா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் சேரியான கட்வேயில் வசிக்கும் பியோனா முடேசி என்ற பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அவர் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டு, உகாண்டாவின் தேசிய வகையர் என்ற நிலையை எட்டிப் பிடிக்கிறார். பின்னர் உலக சதுரங்க ஒலிம்பியாட்களில் கலந்து கொள்கிறார். [6]

குயின் ஆஃப் கேட்வே
Queen of Katwe
இயக்கம்மீரா நாயர்
திரைக்கதைவில்லியம் வீலர்
இசைஅலெக்ஸ் ஹெஃப்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுசீன் பாபிட்
படத்தொகுப்புபாரி அலெக்சாண்டர் பிரவுன்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 10, 2016 (2016-09-10)(TIFF)
செப்டம்பர் 23, 2016 (அமெரிக்கா)
ஓட்டம்124 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஒலுகாந்த மொழி
ஆக்கச்செலவு$15 million[2][3]
மொத்த வருவாய்$10.4 million[3]

ஈஎஸ்பிஎன் இதழில் டிம் க்ரோதர்ஸ் எழுதி வெளியான கட்டுரை மற்றும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ஈஎஸ்பிஎன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது. 2016 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் குயின் ஆஃப் கேட்வே திரையிடப்பட்டது. [7] செப்டம்பர் 23, 2016 அன்று, அமெரிக்காவில் சில குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடபட்டது. பின்னர் செப்டம்பர் 30 அன்று பொது திரையரங்குகளில் வெளியிடப்பட்டது..

உகாண்டாவின் கம்பாலாவில் உள்ள சேரியான கட்வேயில் 10 வயது ஃபியோனா ( மதினா நல்வாங்கா ), அவரது தாயார் நக்கு ஹாரியட் ( லுபிடா நியாங்கோ ) மற்றும் அவரது தம்பிகளுடன் வசித்து வருகிறாள். வாழ்கை ஒரு போராட்டமாகவே உள்ளது. அவளும் அவளுடைய தம்பியும் தங்கள் தாய் சுத்தம் செய்துதரும் மக்காச்சோளத்தை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று வருகின்றனர். மேலும் அவள் தன் குழந்தை தம்பியை பராமரிக்கத் தாய்க்கு உதவுகிறாள். ஒரு நாள் சமயபரப்புநர் நிகழ்ச்சியில் ராபர்ட் காடெண்டேவை ( டேவிட் ஓயெலோவோ ) சந்தித்த போது அவளுடைய உலகம் மாறுகிறது. காடெண்டே ஒரு கால்பந்து பயிற்சியளாளர் மற்றும் உள்ளூர் மையத்தில் குழந்தைகளுக்கு சதுரங்கம் விளையாட கற்றுக்கொடுப்பவர். ஆர்வத்துடன், அவரிடம் பியோனா சதுரங்க விளையாட்டைக் கற்றுக்கொள்கிறாள். அவள் அந்த விளையாட்டில் கவரப்படுகிறாள், விரைவில் காடெண்டேவின் வழிகாட்டுதலின் கீழ் குழிவில் ஒரு சிறந்த வீராங்கனையாக மாறுகிறாள்.

உள்ளூர் சதுரங்க பயிற்ச்சி அதிகாரிகளின் துவக்க எதிர்ப்பை மீறி அவரது பயிற்சியாளர், அவளையும் அணியையும் ஒரு புகழ்பெற்ற உள்ளூர் பள்ளியில் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்கிறார். அவர்களின் திறமையான போட்டியில் அன்றைய நாளில் வெல்கிறது மேலும் பியோனா முதல் இடத்தில் வருகிறாள்.

கேட்வே சேரி வாழ்க்கையானது ஓரு போரட்டமான வாழ்க்கையாக உள்ளது. அந்த போராட்டம் மிக்க கேட்வே வாழ்விலிருந்து தப்பிக்க சதுரங்கம் வழிவகை செய்யும் என்று ஃபியோனா நம்புகிறாள்.

உருசியாவில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் உகாண்டா அணியை பியோனா வழிநடத்துகிறாள். அவள் ஒரு கிராண்ட் மாஸ்டர் ஆகி, தனது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்க தேவையான போருள் வளத்தைப் பெறுவோம் என்று நம்புகிறார். இருப்பினும், போட்டி மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனாள் அவள் தன்னை எதிர்த்து ஆடிய கனடிய போட்டியாளரிடம் தோற்கிறாள்.

ஃபியோனா கட்வேக்குத் திரும்புகிறாள், மனச்சோர்வுற்ற அவள் தன் திறமையைச் சந்தேகிக்கிறாள். இருப்பினும், பயிற்சியாளர் காடெண்டே மற்றும் கட்வே மக்களின் ஆதரவுடன், அவள் சதுரங்க விளையாட்டிற்குத் திரும்புகிறாள். இறுதியில் அவள் தனது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்கும் அளவிற்கு வாழ்வில் வெற்றி பெறுகிறாள்.

நடிகர்கள்

தொகு
  • பியோனா முடேசியாக மதீனா நல்வாங்கா
  • ராபர்ட் காடெண்டேவாக டேவிட் ஓயெலோவோ
  • நக்கு ஹாரியட்டாக லுபிடா நியாங்கோ
  • முகாபி பிரையனாக மார்ட்டின் கபன்சா
  • டாரின் "கே" கியாஸ் நைட்டாக, பியோனாவின் மூத்த சகோதரி
  • இவானாக ரொனால்ட் செமகண்டா
  • பெஞ்சமினாக ஈதன் நசாரியோ லுபேகா
  • பியோனாவின் தோழி குளோரியாவாக நிகிதா பேர்ல் வாலிக்வாக[8]
  • ஜோசப்பாக எட்கர் கன்யிகே
  • சாரா கடெண்டேவாக எஸ்தர் டெபாண்டேகே
  • மிஸ்டர் பரும்பாவாக பீட்டர் ஒடேகே
  • ஷகிராவாக ஷீபா கருங்கி
  • ஜோனிட்டா பெவுலிரா-வாண்டேரா திருமதி கலி

 

மாரிஸ் கிரியா மற்றும் என்டரே மிவைன் ஆகியோர் முறையே தியோ [9] மற்றும் டெண்டோவாக துணை வேடங்களில் நடித்துள்ளனர். கிளாடிஸ் ஓயன்போட் மற்றும் ரெஹேமா நான்ஃபுகா ஆகியோர் முறையே கடைக்காரராகவும் செவிலியராகவும் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கூடுதல் நடிகர்கள்

  • கடெண்டேவின் பாட்டியாக சாரா கிசாவுசி
  • டெசாக ரிச்சர்ட் துவாங்கியே
  • காபா வணிகராக ஜோயல் ஒகுயோ பிரின்ஸ்
  • ரஷ்ய செஸ் அதிகாரியாக ரஸ்ஸல் சவாடியர்
  • டினாஸ் ஸ்டாஃபோர்ட்
  • ருவாபுஷேனி அதிகாரியாக ஆரோன் மொலோசி
  • ஃபியோனா முடேசியாக கரினா நெல்
  • செஸ் கூட்டமைப்பு செயலாளராக மேகி பெனடிக்ட்

குறிப்புகள்

தொகு
  1. "Queen of Katwe (PG)". bbrc.co.uk. British Board of Film Classification. September 12, 2016. பார்க்கப்பட்ட நாள் September 17, 2016.
  2. Fleming, Mike Jr. (January 9, 2015). "David Oyelowo & Lupita Nyong'o In Talks To Star In 'Queen Of Katwe' For Disney". https://deadline.com/2015/01/david-oyelowo-lupita-nyongo-queen-of-katwe-chess-movie-1201345794/#. 
  3. 3.0 3.1 "Queen of Katwe (2016)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 10, 2017.
  4. Carissimo, Justin (May 10, 2016). "Lupita Nyong'o and David Oyelowo star in the new trailer for Queen of Katwe". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/films/lupita-nyongo-and-david-oyelowo-star-in-the-new-trailer-for-queen-of-katwe-a7023546.html. 
  5. McNary, Dave (January 9, 2015). "David Oyelowo, Lupita Nyong'o in Talks for Disney's 'Queen of Katwe'". Variety. https://variety.com/2015/film/news/david-oyelowo-lupita-nyongo-in-talks-for-disneys-queen-of-katwe-1201398306/#. 
  6. Robinson, Joanna (August 16, 2015). "Why Lupita Nyong'o, Not Superheroes, Represents the Future of Disney". Vanity Fair. https://www.vanityfair.com/hollywood/2015/08/lupita-nyongo-disney-d23-star-wars-jungle-book-queen-of-katwe. 
  7. "Toronto To Open With 'The Magnificent Seven'; 'La La Land', 'Deepwater Horizon' Among Galas & Presentations". Deadline Hollywood. July 26, 2016. பார்க்கப்பட்ட நாள் July 26, 2016.
  8. "Uganda's Queen of Katwe star Nikita Pearl Waligwa dies aged 15". BBC News. February 16, 2020. https://www.bbc.com/news/world-africa-51521775. 
  9. Gitau, Elly (May 11, 2015). "Uganda: Maurice Kirya to Star Alongside Lupita Nyong'o in Queen of Katwe". The Star. http://allafrica.com/stories/201505110316.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயின்_ஆஃப்_கேட்வே&oldid=3639810" இலிருந்து மீள்விக்கப்பட்டது