பாதல் சர்கார்
பாதல் சர்க்கார் என்று அழைக்கப்படும் சுதீந்திர சிர்கார் (15 யூலை 1925-13 மே 2011), என்பவர் செல்வாக்கு மிக்க ஒரு இந்திய நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும் ஆவார். 1970 களில் நக்சலைட் இயக்கத்தின் எழுச்சியின்போது ஸ்தாபனங்களுக்கு எதிரான நாடகங்களுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் எவம் இந்திரஜித், பாசி கபார், சாரி ராட் ஆகியவை நன்கு அறியப்பட்ட இலக்கியப் படைப்புகளாகும். இவரது சமத்துவ மூன்றாம் அரங்கு மூலம் தெரு நாடகம் மற்றும் சோதனை வங்க நாடகங்களில் முன்னோடி ஆவார். இவர் தனது ஆங்கன்மஞ்ச் (முற்ற மேடை) நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான நாடகங்களை எழுதினார். அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளைக் கொண்ட இந்திய நாடக ஆசிரியர்களில் ஒருவர் இவர் ஆவார்.[1][2] இவரது ஆரம்பகால நகைச்சுவை நாடகங்கள் பிரபலமாக இருந்தபோதிலும், இவரது ஏவம் இந்திரஜித் (மற்றும் இந்திரஜித்) இந்திய நாடக அரங்கில் மைல்கல் நாடகமாக மாறியது.[3] 1960 களில் முக்கிய நாடக ஆசிரியராக இவரது எழுச்சியானது வங்காள மொழியில் இந்திய நவீன நாடகம் எழுந்த காலமாக கருதப்படுகிறது. அதே போல் விஜய் தெண்டுல்கர் மராத்தியிலும், மோகன் ராகேஷ் இந்தியிலும், கிரீஷ் கர்னாட் கன்னடத்திலும் செய்தனர்.[4]
பாதல் சர்கார் | |
---|---|
2010 இல் பாதல் சர்கார் | |
பிறப்பு | சுதீந்திர சர்கார் 15 சூலை 1925 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 13 மே 2011 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 85)
பணி | நாடக ஆசிரியர், நாடக இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1945–2011 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஏவம் இந்திரஜித் (மற்றும் இந்திரஜித்) (1963) பாகல் கோடா (பைத்தியக் குதிரை) (1967) |
விருதுகள் | 1968 சங்கீத நாடக அகாதமி விருது 1972 பத்மசிறீ 1997 சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் |
இவருக்கு 1972 இல் பத்மசிறீ விருதும், 1968 இல், சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கபட்டன. நாடகக் கலைக்கு இந்திய அரசால் வழங்கப்படும் கௌரவமான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் 1997 இல், இவருக்கு வழங்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "When all the world was onstage". இந்தியன் எக்சுபிரசு. 30 August 2004. http://www.indianexpress.com/oldStory/54083/.
- ↑ "A tribute to Badal Sircar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 July 2009 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811044658/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-19/regional/28180643_1_long-festival-tribute-kumar-roy.
- ↑ "Drama of the Indian theatre journey". Financial Express. 17 September 2006. http://www.financialexpress.com/printer/news/177787/.
- ↑ "Drama between the lines". 28 January 2007. http://www.financialexpress.com/news/drama-between-the-lines/190990/0.
- ↑ Sangeet Natak Akademi Awards பரணிடப்பட்டது 23 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் Sangeet Natak Akademi website.