சர்க்கரை அச்சு பொம்மை
சர்க்கரை அச்சு பொம்மை என்பது மராட்டிய மாநிலத்தினை பூர்வீகமாகக் கொண்ட பொருளாகும். [1] இதனை சர்க்கரை மிட்டாய் எனவும் அழைக்கின்றனர். சர்க்கரை பாகால் தயாரிக்கப்படும் இந்த அச்சு பொம்மைகள் உண்ணத்தக்கவையாக உள்ளன. வீட்டு விசேசங்களுக்கு அழகு சேர்க்கவும், நவராத்திரி கொலுவில் வைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
தயாரிக்கும் முறை
தொகுசர்க்கரையை பாகு பதத்திற்கு அடுப்பில் வைத்து சூடேற்றி, கெட்டிப் பதம் வந்ததும் வண்ணமேற்றும் பொடி, ஏலக்காய் பொடியை சேர்க்கின்றனர். மர அச்சுகளில் சர்க்கரை பாகினை ஊற்றி காய வைக்கின்றனர். காய்ந்ததும் அச்சுகளிலிருந்து சர்க்கரை மிட்டாய் பிரித்தெடுக்கப்படுகிறது.
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற உணவு வண்ணங்கள் சர்க்கரை பொம்மைகளில் சேர்க்கப்படுகின்றன.[2]
ராதா கிருஷ்ணன், விநாயகர் செட், அன்னப்பறவை செட், தேர், பன்னீர் சொம்பு, யானை செட், திராட்சை, சீதாப்பழம், வாழைப்பழம், அன்னாசிப்பழம் போன்றவை சர்க்கரை மிட்டாய்களில் செய்து நவராத்திரி கொழுவிற்கும், வீட்டு விசேஷங்களுக்கும் அலங்காரத்திற்கு வைக்கின்றனர். [3]
ஆதாரங்கள்
தொகு- ↑ விஷ்வா,ம.அரவிந்த், ஜோ வியானி. "சர்க்கரை பொம்மை... இது தஞ்சாவூர் ருசி!". https://www.vikatan.com/.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "அசத்தலான சர்க்கரைப் பொம்மைகள்". இந்து தமிழ் திசை.
- ↑ https://m.dinamalar.com/detail.php?id=2329117