சர்க்கரை அமிலம்
சர்க்கரை அமிலங்கள் (Sugar acids) என்பவை கார்பாக்சில் குழு ஒன்றை கொண்டுள்ள ஒற்றைச் சர்க்கரைகள் ஆகும் [1]. சர்க்கரை அமிலங்களின் முக்கிய வகைபாடுகளில் இவை அடங்கியுள்ளன:
- ஆல்டோனிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசிலுள்ள ஆல்டிகைடு வேதி வினைக்குழு இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகிறது.
- அலோசோனிக் அமிலங்கள்: 2-கீட்டோசிலுள்ள முதலாவது ஐதராக்சில் தொகுதி இவ்வகையில் ஆக்சிசனேற்றப்பட்டு ஓர் α-கீட்டோவமிலம் உருவாக்கப்படுகிறது.
- யுரோனிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசு அல்லது கீட்டோசின் விளிம்பு ஐதராக்சில் தொகுதி இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகிறது.
- ஆல்டாரிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசின் இரண்டு முனைகளும் இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகின்றன.
உதாரணங்கள்:
தொகுஆல்டோனிக் அமிலங்கள்
தொகு- கிளிசரிக் அமிலம் (3 கார்பன்கள்)
- சைலோனிக் அமிலம் (5 கார்பன்கள்)
- குளுக்கோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
- அசுகார்பிக் அமிலம் [2] (6 கார்பன்கள்)
அலோசோனிக் அமிலம்
தொகு- நியூராமினிக் அமிலம்
- கீட்டோடீயாக்சியாக்டுலோசோனிக் அமிலம்
யுரோனிக் அமிலங்கள்
தொகு- குளுக்குரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
- காலக்டுரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
- இடுரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
ஆல்டாரிக் அமிலங்கள்
தொகு- டார்டாரிக் அமிலம் (4 கார்பன்கள்)
- மெசோ-காலக்டாரிக் அமிலம் (6 கார்பன்கள்)
- டீ குளுக்காரிக் அமிலம் (6 கார்பன்கள்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Robyt, J.F. (1998). Essentials of carbohydrate chemistry. New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-94951-8.
- ↑ Davies Michael B.; Austin John; Partridge David A. (1991). Vitamin C: Its Chemistry and Biochemistry. The Royal Society of Chemistry. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85186-333-7.