கிளிசரிக் அமிலம்
கிளிசரிக் அமிலம் (Glyceric acid) என்பது C3H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கிளிசராலை ஆக்சிசனேற்றம் செய்து கார்பாக்சில் குழுவைக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைச் சர்க்கரை வகை சர்க்கரை அமிலத்தைத் தயாரிக்கிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-டையைதராக்சிபுரோப்பனாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
கிளிசரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
473-81-4 | |
ChemSpider | 732 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 752 |
| |
பண்புகள் | |
C3H6O4 | |
வாய்ப்பாட்டு எடை | 106.08 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
CH2OH-CHOH-CH2OH+[O]→CH2OH-CHOH-COOH+H2O
கிளிசரிக் அமிலத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உப்புகளும் எசுத்தர்களும் கிளிசரேட்டுகள் எனப்படுகின்றன.
உயிர் வேதியியல்
தொகு2-பாசுப்போகிளிசரிக் அமிலம், 3-பாசுப்போகிளிசரிக் அமிலம், 1,3-பிசுபாசுப்போகிளிசரிக் அமிலம் உள்ளிட்ட பாசுப்பேட்டு உயிர்வேதியியல் இடைநிலைச் சேர்மங்கள் கிளைக்கலாற் பகுப்பு வினையில் தோன்றும் முக்கிய வேதிப் பொருட்களாகும் [2].
செரீன் போன்ற அமினோ அமிலங்களைத் தொகுக்கும் வினையில் 3-பாசுப்போ கிளிசரிக் அமிலம் ஒரு முக்கியமான மூலக்கூறாகத் திகழ்கிறது. சிசுடீன், கிளைசீன் போன்ற அமினோ அமிலங்கள் தயாரிப்பில் செரீன் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 4378.
- ↑ Reece, Jane B. (2009). Biology (8th ed.). San Francisco, CA: Pearson. pp. 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8053-6844-4.