சர்மிசுதா பிரீதம்

சர்மிசுதா பிரீதம் (ஆங்கிலம்: Sarmistha Pritam; அசாமிய மொழி: শৰ্মিষ্ঠা প্ৰীতম) (பி. 18 திசம்பர் 1987) என்பவர் ஓர் அசாமிய எழுத்தாளர் ஆவார். முதுகெலும்புத் தசைநார் சிதைவு உள்ளவர்களுக்கும் இவர் ஆலோசகராகவும் இவர் இருக்கிறார்.

இளமை தொகு

சர்மிசுதா பிரீதம் 18 திசம்பர்[1] 1987[2] அன்று அசாம் மாநிலம் நகோன், புலாகுரியில் பிறந்தார்.[3][4] தனது 5 வயதில், இவருக்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.[5] இது 8 வயதிற்குள் குறிப்பிடத்தக்க உடல் குறைபாடுகளை ஏற்படுத்தியது.[2]

இருப்பினும் பிரீதம், பொருளாதாரத்தில் நல்ல மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றார்.[4] பூலகுரி எல். பி. பள்ளியில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய இவர், பூலகுரி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவர் தனது உயர்நிலைக் கல்வியை ரகா உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியினை ராகா கல்லூரியிலும் முடித்தார்.

இலக்கிய வாழ்க்கை தொகு

பிரீதம் பல்வேறு அசாமியப் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களின் எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2013-இல் இவரது கட்டுரைகளின் தொகுப்பான தாவோரியா அகக்சோர் பெலி (இருண்ட வானத்தில் சூரியன்), கவிதைத் தொகுப்பு, டோக்மோகலி (பகல் நேரம்) மற்றும் சுயசரிதை ஆத்மகதா ஆகியவற்றை வெளியிட்டார்.[4] இவரது நான்காவது புத்தகம் குழந்தைகளுக்காக அல்புலர் சோபுன் (அல்புலின் கனவு) என்ற தலைப்பில் எழுதப்பட்டது.[4]

2015ஆம் ஆண்டில், இவர் தனது சுயசரிதையின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்குத் தேசியப் புத்தக அறக்கட்டளையிலிருந்து மதிப்பூதியம் பெறுவதற்காக உதவி வேண்டி பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதினார்.[2] 2021-இல் இவர் அனதஹின், ரங், பலுகத் பியோலி பேலா மற்றும் போரன் நிகோர் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.[6]

2021ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் பாபி சர்மா பருவா தனது அடுத்த படமான தியோகா (வாக்கிங் இன் தி ஏர்) ப்ரீதமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்தார்.[1]

ஆலோசனை தொகு

பிரீதம் அறிவியலை ஊக்குவிக்கும் எல்லோரா விக்யான் மஞ்சா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார்.[5] 2021ஆம் ஆண்டில், முதுகெலும்புத் தசைச் சிதைவு உள்ளவர்களுக்காகவும், சிகிச்சைக்கான செலவினங்களுக்காக அரசாங்கத்தின் உதவிக்காகவும் இவர் பணியாற்றினார்.[5][6][7]

நூல் வெளியீட்டு பணிகள் தொகு

  • ஆத்மகதா (சுயசரிதை)
  • அல்புலோர் சோபுன் (குழந்தைகள் நாவல்)
  • அந்தஹீன் (உந்துதல் பேச்சாளர் நிக் வுஜிசிக்கின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய சுயசரிதை)
  • என் முகத்தில் சூரியன் (அசாமிய மொழியில் எழுதப்பட்ட சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பிரபுல்லா கடோக்கி மொழிபெயர்த்தது. தேசியப் புத்தக அறக்கட்டளை வெளியீடு)
  • மேரா ஜிவோன் மேரி கஹானி (கஜேந்திர ரதியின் ஆத்மகதாவின் இந்தி மொழிபெயர்ப்பு. தேசியப் புத்தக அறக்கட்டளை வெளியிட்டது)
  • ரங் (நாவல்)
  • பலுகத் பியாலி பேலா (நாவல்)

விருதுகள் தொகு

  • 2012 முனின் போர்கடகி விருது, ஆத்மகதா[3][4][8]
  • 2015 மாநில அரசின் இலக்கிய விருது[6][9]
  • கீதாஞ்சலி பாருவா மிலி இலக்கிய விருது, 2017
  • தேவ்சன்சு சிறப்பு இலக்கிய விருது, 2017
  • 2017 கே. கே. கண்டிக்யு, தேசிய நிதியுதவி[10][11]
  • கோமன் பர்கோகானி பாடா இலக்கிய விருது, ரங்கிற்காக[12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Gani, Abdul (December 19, 2021). "Film on writer Sarmistha Pritam announced". The Assam Tribune. https://assamtribune.com/assam/film-on-writer-sarmistha-pritam-announced-1344595. 
  2. 2.0 2.1 2.2 Kashyap, Samudra Gupta (December 4, 2015). "Wheelchair-bound author takes fight for NBT dues to PM Modi". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/india/india-news-india/wheelchair-bound-author-takes-fight-for-nbt-dues-to-pm-modi/. 
  3. 3.0 3.1 "Homen Bargohain Nyas Botas". The Assam Tribune. February 1, 2019. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Pens defy physical discomfort - Two young authors overcome disabilities to write children’s books". The Telegraph. March 18, 2013. https://www.telegraphindia.com/north-east/pens-defy-physical-discomfort-two-young-authors-overcome-disabilities-to-write-childrens-books/cid/325966. 
  5. 5.0 5.1 5.2 "Assamese writer Sarmistha Pritam Baruah seeks government aid for medical treatment". தி இந்து. October 9, 2021. https://www.thehindu.com/news/national/other-states/assamese-writer-sarmistha-pritam-baruah-seeks-government-aid-for-medical-treatment/article36912473.ece. 
  6. 6.0 6.1 6.2 "Prohibitive cost of SMA drug a challenge for patients like Sarmistha Pritam". The Assam Tribune. September 16, 2021. 
  7. "Ailing writer Sarmistha to move CM for help through State's journalist fraternity". The Assam Tribune. January 11, 2022. 
  8. "Literary Awards". enajori.com. 5 மே 2011. Archived from the original on 22 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்பிரல் 2013.
  9. "Literary, artist, family pension announced". The Assam Tribune. August 14, 2015. https://link.gale.com/apps/doc/A425405559/STND?u=wikipedia&sid=ebsco&xid=4cf7b05b. 
  10. "KK Handiqui National Awards given away". NE Now News. December 11, 2017. https://nenow.in/north-east-news/assam/kk-handiqui-national-awards-given-away.html. 
  11. "KK Handiqui Award & fellowships announced". The Sentinel (Guwahati). November 28, 2017. https://link.gale.com/apps/doc/A516159253/STND?u=wikipedia&sid=ebsco&xid=725554f0. 
  12. Borah, Nilutpal (October 27, 2021). "এগৰাকী অদম্য সাহসী অসমীয়া যুৱতী, বহুতৰ বাবে প্ৰেৰণা হৈ পৰা SMA যোদ্ধা শৰ্মিষ্ঠাক প্ৰয়োজন আপোনাৰ সহায়ৰ". News18 India. https://assam.news18.com/news/assam/young-literary-woman-sarmistha-pritam-who-have-become-an-inspiration-for-many-need-your-help-nilutpal-gb-164977.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்மிசுதா_பிரீதம்&oldid=3920478" இலிருந்து மீள்விக்கப்பட்டது