சர்யா (Zarya, உருசியம்: Заря), என்பது விண்வெளியில் நிறுவப்படவிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது பகுதி (module) சர்யா ஐக்கிய அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும். அதன் இயக்கத்துக்குத் தேவையான செலவு முழுவதுக்கும் அமெரிக்காவே பொறுப்பெடுத்துள்ளது. இதன் கட்டுமானப்பணி ரஷ்யாவில் மாஸ்கோ அருகில் குரூனிச்சேவ் என்ற இடத்தில் டிசம்பர் 1994 இல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 1998 இல் முடிவடைந்தது. சர்யா 19,300 கிகி எடையும், 12.55 மீ நீளமும் 4.1 மீ அகலமும் உடையது தேவையான மின்சக்தி, காப்பகம், மற்றும் பல பொருட்களைக் காவிச் சென்றது.

நாசாவின் STS--88 விண்ணூர்தியிலிருந்து சர்யா மொடியூல்
சர்யா ஏவப்படல்

அமைப்பு

தொகு

சர்யா ஐக்கிய அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகும். அதன் இயக்கத்துக்குத் தேவையான செலவு முழுவதுக்கும் அமெரிக்காவே பொறுப்பெடுத்துள்ளது. இதன் கட்டுமானப்பணி ரஷ்யாவில் மாஸ்கோ அருகில் குரூனிச்சேவ் என்ற இடத்தில் டிசம்பர் 1994 இல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 1998 இல் முடிவடைந்தது. சர்யா 19,300 கிகி எடையும், 12.55 மீ நீளமும் 4.1 மீ அகலமும் உடையது.

  • நீளம்: 12.56 மீ
  • விட்டம்: 4.11 மீ
  • Solar array length: 10.67 மீ
  • Solar array width: 3.35 மீ
  • திணிவு: 19,300 கிகி

புறப்பாடு

தொகு

சர்யா கசக்ஸ்தானின் பாய்க்கனூர் விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 20, 1998 இல் 400 கிமீ உயர வட்டமையத்துக்கு (orbit) ஏவப்பட்டது. இதன் வாழ்வுக்காலம் குறைந்தது 15 ஆண்டுகளாகும். சர்யா வட்ட ஒழுக்கை அடைந்ததும், STS-88 என்ற வேறொரு விண்ணூர்தி டிசம்பர் 4, 1998 இல் யுனிட்டி மொடியூலை இணைக்க ஏவப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்யா&oldid=3356483" இலிருந்து மீள்விக்கப்பட்டது