சர்லஸ் புகாவ்ஸ்கி
என்றி சார்லஸ் புகாவ்ஸ்கி (Henry Charles Bukowski) பிறப்பு என்ரிச் கார்ல் புகோவ்ஸ்கி, இடாய்ச்சு: [ˈhaɪnʁɪç ˈkaʁl buˈkɔfski]; ஆகத்து 16, 1920 – மார்ச் 9, 1994) என்பவர் ஒரு ஜெர்மன்-அமெரிக்க கவிஞர், புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் வளர்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, பண்பாட்டு, பொருளாதார சூழல் போன்றவை இவரது எழுத்தில் தாக்கதை ஏற்படுத்தின.[4] புக்கோவ்ஸ்கியின் படைப்புகள் பெரும்பாலும் அமெரிக்க கீழ்தட்டு மக்களின் வாழ்வையும், நேரடி சொல் வழக்கையும், வன்முறை, மதுபானம், பாலுறவு கற்பனைகளையும் கொண்டவை. லாஸ் ஏஞ்சல்சின் தலைமறைவு இதழான ஓபன் சிட்டியில் இவர் எழுதிய நோட்ஸ் ஆஃப் எ டர்ட்டி ஓல்ட் மேன் கட்டுரையின் விளைவாக எஃபிஐ இவரைப் பற்றிய ஒரு கோப்பை வைத்திருந்தது.[5]
சர்லஸ் புகாவ்ஸ்கி | |
---|---|
பிறப்பு | என்ரிச் கார்ல் புகோவ்ஸ்கி ஆகத்து 16, 1920 ஆண்டர்நாச், பிரஷியா, ஜெர்மனி |
இறப்பு | மார்ச்சு 9, 1994 லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா | (அகவை 73)
தேசியம் | ஜெர்மன்
American |
பணி |
|
அரசியல் இயக்கம் | அழுக்கு யதார்த்தவாதம்,[1][2] மீறிய புனைகதை[3] |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
புகோவ்ஸ்கி 1940 களின் முற்பகுதியில் தொடங்கி 1990 களின் முற்பகுதி வரை சிற்றிதழ்களில் நிறைய எழுதினார். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகளையும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், ஆறு புதினங்களையும் எழுதினார். தனது வாழ்க்கையில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். [6]
1986 இல், டைம் இதழ் புக்கோவ்ஸ்கியை "அமெரிக்க அடித்தட்டு வாழ்க்கையின் பரிசு பெற்றவர் " என்று அழைத்தது.[7]
புக்கோவ்ஸ்கி தன் வாழ்நாளில், அமெரிக்காவில் உள்ள கல்வித் திறனாய்வாளர்களிடமிருந்து அவ்வளவாக கவனத்தைப் பெறவில்லை. ஆனால் இவர் பிறந்த ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றார். 1994 மார்ச்சில் புக்கோவ்ஸ்கி இறந்ததிலிருந்து, அவரது வாழ்க்கை, எழுத்துக்கள் என இரண்டையும் பற்றிய பல திறனாய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டன்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dobozy, Tamas (2001). "In the Country of Contradiction the Hypocrite is King: Defining Dirty Realism in Charles Bukowski's Factotum". Modern Fiction Studies 47: 43–68. doi:10.1353/mfs.2001.0002. https://archive.org/details/sim_modern-fiction-studies_spring-2001_47_1/page/43.
- ↑ "Charles Bukowski (criticism)". Enotes.com. பார்க்கப்பட்ட நாள் July 17, 2014.
- ↑ Donnelly, Ben. "The Review of Contemporary Fiction: Charles Bukowski: Locked in the Arms of a Crazy Life by Howard Sounces". Dalkey Archive Press at the University of Illinois. Archived from the original on October 11, 2008.
- ↑ "Bukowski, Charles". Columbia University Press.
- ↑ "Charles Bukowski FBI files". bukowski.net. Archived from the original on 2006-02-03. பார்க்கப்பட்ட நாள் 2024-08-02.
- ↑ "Charles Bukowski, King of the Underground From Obscurity to Literary Icon". Palgrave Macmillan. Archived from the original on September 24, 2015. பார்க்கப்பட்ட நாள் April 2, 2015.
- ↑ Iyer, Pico (June 16, 1986). "Celebrities Who Travel Well". Time. Archived from the original on March 16, 2008. பார்க்கப்பட்ட நாள் April 28, 2010.