சர்வதேச நகர்பேசி அடையாளம்

சர்வதேச நகர்பேசி அடையாளம் (International Mobile Equipment Identity, சுருக்கமாக IMEI) நகர்பேசிகளிற்கான தனித்துவமான ஓர் எண்ணாகும். இது பொதுவாக நகர்பேசிகளின் மின்கலத்திற்குக் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். இதனை நகர்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் காணமுடியும்.

IMEI

சர்வதேச நகர்பேசி அடையாளமானது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் (GSM) உரிமையுடைய நகர்பேசிகள் மாத்திரமே பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற களவாடப்பட்ட நகர்பேசிகள் பங்குபற்றாமல் தடுப்பதற்கும் பயன்படுகின்றது.

அநேகமான வலையமைப்புகளில் சிம் மட்டும் அன்றி எந்தச் சர்வதேச நகர்பேசி அடையாளமுள்ள நகர்பேசியிலிருந்து தொடர்பு கொள்கின்றார் என்பதையும் அறிய முடியும்.[சான்று தேவை]

சர்வதேச நகர்பேசி அடையாளத்தின் கட்டமைப்பு தொகு

சர்வதேச நகர்பேசி அடையாளமானது 15 இலக்க எண்ணாகும். இது எங்கே உருவாக்கப்பட்டது, மாதிரி, குறியீட்டு இலக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் மாதிரியும் உருவாக்கமும் 8 இலக்கங்களைக் கொண்டிருக்கும். இது மாதிரியமைப்புக் குறியீட்டையும் கொண்டிருக்கும். சர்வதேச நகர்பேசி அடையாளத்தின் மிகுதியானது தயாரிப்பாளரால் வழங்கப்படும். இது ஒருபோதும் வலையமைப்பில் பரிமாறப்படாது.[சான்று தேவை]

2004ஆம் ஆண்டிற்கமைய சர்வதேச நகர்பேசி அடையாளமானது AA-BBBBBB-CCCCCC-D பாணியில் அமைந்திருக்கும். இங்கு CCCCCC நகர்பேசியின் தொடரிலக்கம் ஆகும்.