சர்வைவர் தமிழ்
சர்வைவர் தமிழ் என்றும் அழைக்கப்படும் சர்வைவர் என்பது 12 செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சியாகும்.[1][2][3] இது சுவீடன் நாட்டை சேர்ந்த சார்லி பார்சன்ஸால் என்பவரால் 1997 இல் உருவாக்கப்பட்ட 'ராபின்சன்' என்ற நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இந்த நிகழ்ச்சி பனிஜய் ஆசியாவால் தயாரிக்கப்படுகிறது[4].
சர்வைவர் தமிழ் | |
---|---|
வகை | உண்மைநிலை நிகழ்ச்சி |
உருவாக்கம் | தீபக் தார் |
மூலம் | ராபின்சன் |
வழங்கல் | அர்ஜுன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | பனிஜய் ஆசியா |
படப்பிடிப்பு தளங்கள் | சான்சிபார் தன்சானியா |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | 45 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் ஜீ5 |
ஒளிபரப்பான காலம் | 12 செப்டம்பர் 2021 ஒளிபரப்பில் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | சர்வைவர் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.[5][6][7] சர்வைவர் தமிழில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி வடிவம்
தொகுஇந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு பானிஜாய் நிறுவனத்திற்குட்பட்ட வடிவத்தில் முன்தெரியாத தீவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[8][9][10][11] போட்டியில் வெற்றி பெறுபவர் வெளியேற்றதைத் தவிர்த்து 90 நாட்கள் உயிர் பிழைத்த பிறகு 1 கோடி (₹ 1,00,00,000) ரொக்கப் பரிசைப் பெறுவார்.
கண்ணோட்டம்
தொகுசார்லி பார்சன்ஸ் உருவாக்கிய அசல் ஸ்வீடிஷ் எக்ஸ்பெடிஷன் ராபின்சன் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி தான் 'சர்வைவர் தமிழ்' ஆகும். அசல் சர்வைவர் போலல்லாமல், சர்வைவர் தமிழ் பிரபல போட்டியாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. போட்டியாளர்கள் (சர்வைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்). எந்த நவீன கால அமைப்புகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தனித்த தீவில் வாழ்கின்றனர். போட்டியின் 'துவக்க நாள்' அல்லது தொடக்கத்தில் சர்வைவர்கள் இரண்டு வெவ்வேறு பழங்குடியினராகப் பிரிக்கப்படுவார்கள். சர்வைவர்கள் தங்கள் பழங்குடியினர், பழங்குடி சபை மற்றும் வெளியேற்றதை எதிர்கொள்வதில் இருந்து பாதுகாப்பாக இருக்க தடை காப்ப நிலைக்கு (immunity) போராட வேண்டும். ஒவ்வொரு வாரமும் தோல்வியடைந்த அணி பழங்குடி சபையில் கலந்து கொள்ள வேண்டும், அங்கு அவர்கள் தங்கள் இணை குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு வாக்களிப்பார்கள். யார் தங்கள் பழங்குடியினரிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் இறுதியில் விளையாட்டிலிருந்து நீக்கப்படுவார்கள்.
தீவின் விதிகள்
தொகுசர்வைவர்கள் தேவையான குறைந்த அளவு துணிகளை மட்டுமே தீவுக்கு கொண்டு வர முடியும். அவர்களுடன் தங்கள் பெட்டியை உடன் கொண்டு செல்ல முடியாது. சர்வைவர்கள் அனைவரும் கண்டிப்பாக தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தீவு
தொகுஒவ்வொரு பழங்குடி குழுக்களும் தங்குவதற்கு இரண்டு வெவ்வேறு தீவுகள் இருக்கும், மேலும் பணிகள் மற்றும் பழங்குடி ஆலோசனை சபை நடைபெறுவதற்கு ஒரு தனி தீவு இருக்கும்.
சர்வைவர்கள் தாங்கள் இருக்கும் தீவில் கூடாரங்கள் போன்ற தங்குமிடங்களை உருவாக்க வேண்டும், அதே நேரத்தில் தீவில் வரையறுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சர்வைவர்கள் தங்கள் உணவை சமைக்க நெருப்பை உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளிபரப்பு
தொகுதினசரி அத்தியாயங்கள் சர்வைவர்கள் பங்கு பெரும் 'தடை காப்ப நிலை (immunity)' அல்லது 'வெகுமதி (reward)' சவால்கள் போன்ற முக்கியப் பணிகளை முன்வைக்கின்றன மற்றும் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பழங்குடி சபைகளில் கவனம் செலுத்துகின்றன.
நிகழ்ச்சியின் பருவங்கள்
தொகுSeason | வருடம் | தொகுப்பாளர் | இடம் | Episodes | Originally aired | போட்டியாளர்கள் | அசல் குழுக்கள் | நாட்கள் | Launch TRP Ratings | Finale TRP Ratings | பரிசு தொகை | வெற்றியாளர் | இறுதி வாக்கு (வெற்றியாளருக்கு) | இரண்டாம் இடம் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
First aired | Last aired | Network | ||||||||||||||||
1 | 2021 | அர்ஜூன் | சான்சிபார், தான்சானியா | 91 | செப்டம்பர் 12, 2021 | நிகழ்ந்துகொண்டிருக்கிறது | ஜீ தமிழ் | 16 | காடர்கள் & வேடர்கள் | 90 | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | ₹1 கோடி (US$1,30,000) | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் | அறிவிக்கப்படும் |
பருவங்கள்
தொகுஅர்ஜுன் சர்ஜா தொகுத்து வழங்கும் முதல் பருவம் ஜீ தமிழில் 12 செப்டம்பர் 2021 அன்று ஒளிபரப்பப்பட்டது.[12]
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zee Tamil to launch Survivor series". www.exchange4media.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "Mumbai: Tamil GEC, Zee Tamil on Tuesday announced the launch of its upcoming reality show, Survivor". www.indiantelevision.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "New reality show 'Survivor' to premiere soon". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ Asia, Banijay. "Banijay Asia Launches Survivor India Comeback". Banijay Asia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ "Arjun To Host The Tamil Remake Of Survivor Instead Of Simbu?". www.republicworld.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "Action King Arjun to host an adventure reality show?". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "Survivor to Dance vs Dance season 2: Here's a look at upcoming Tamil TV shows set to premiere soon". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "Banijay format Survivor set to return to India on Zee Tamil". www.c21media.net (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-27.
- ↑ "Survivor Tamil to start soon on Zee Tamil, Action King Arjun to host?". bigtechnologytrends.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "Survivor Tamil: Action King Arjun to host Survivor Tamil series on Zee Tamil". thenewscrunch.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "Zee Tamil set to launch the worldwide famous reality show "Survivor" in India". www.iwmbuzz.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "New reality show 'Survivor' to premiere soon". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.