சறுக்கு எதிரொளிப்பு

இருபரிமாண வடிவவியலில் சறுக்கு எதிரொளிப்பு (glide reflection) என்பது ஒரு கோட்டில் நிகழும் எதிரொளிப்பு மற்றும் அந்த எதிரொளிப்பின் அச்சுக்கு இணையான பெயர்ச்சி இரண்டின் சேர்வாக அமையும் யூக்ளிடிய தளத்தின் உருமாற்றம் ஆகும்.

ஒரு கோட்டில் நிகழும் எதிரொளிப்பு, அக்கோட்டுக்கு இணையான பெயர்ச்சி ஆகியவற்றின் தொகுப்பாக அமையும் சறுக்கு எதிரொளிப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு
ஒரு சறுக்கு எதிரொளிப்பானது, இடது காற்தடத்தையும் வலது காற்தடத்தையும் ஒன்றுக்கொன்று மாற்றுகிறது.

ஒரு சறுக்கு எதிரொளிப்பால் பிறப்பிக்கப்படும் சமஅளவைக் குலம் ஒரு முடிவுறா சுழற்குலமாக அமையும்.[1]

இரு சம சறுக்கு எதிரொளிப்புகளின் தொகுப்பு ஒரு பெயர்ச்சியாகக் கிடைக்கும். இப்பெயர்ச்சியின் திசையனின் அளவு சறுக்கு எதிரொளிப்புடையதைப்போல் இருமடங்காக இருக்கும். எனவே சறுக்கு எதிரொளிப்புகளின் இரட்டை அடுக்குகள் ஒரு பெயர்ச்சி குலத்தை உருவாக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Martin, George E. (1982), Transformation Geometry: An Introduction to Symmetry, Undergraduate Texts in Mathematics, Springer, p. 64, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387906362.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சறுக்கு_எதிரொளிப்பு&oldid=3416038" இலிருந்து மீள்விக்கப்பட்டது