சலசங்வி ஈசுவரன் கோயில்
சலசங்வி ஈசுவரன் கோயில் [1] அல்லது கமலீசுவரன்கோயில் அல்லது கல்லேசுவரன்கோயில் என்பது இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பிதார் மாவட்டத்தில் சலசங்வி (ஜலசங்வி) என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். கல்வெட்டுகளின்படி, சாளுக்கிய வம்சத்தின் புகழ்பெற்ற ஆறாம் விக்ரமாதித்யா பேரரசரின் ஆட்சியின்போது இந்த கோவில் கட்டப்பட்டது. [1]
ஈசுவரன் கோயில் | |
---|---|
கோயிலின் பக்க பார்வை | |
பெயர் | |
பெயர்: | Iswara temple |
அமைவிடம் | |
நாடு: | India |
மாகாணம்: | கர்நாடகா |
மாவட்டம்: | பீதர் மாவட்டம் |
அமைவு: | சலசங்வி |
ஆள்கூறுகள்: | 17°49′52.33″N 77°10′34.95″E / 17.8312028°N 77.1763750°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | சாளுக்கியர் |
கட்டடக்கலை
தொகுகல்யாணி சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கிராம குளத்தின் அருகில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் உட்புற மற்றும் வெளிப்புற சுவரில் அழகிய பெண் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படும் சிலைகள் சலாபஞ்சிக்கா அல்லது மந்தாகினி பாணி சிற்பங்கள் ஆகும். அவை வெவ்வேறு விதமான ஆடைகள் மற்றும் சிகையலங்காரங்கள் கொண்டு இருக்கின்றன. சில நேரங்களில் தங்கள் கைகளில் மக்காச்சோளம், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை வைத்துள்ளனர். ஜலசங்வி கோவிலின் சிற்பங்கள் பின்வந்த ஹொய்சாள பேலூர் , ஹலேபீடு மற்றும் சோமநாதபுரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. [2] இந்த சாளுக்கிய கோயில் ஒரு நட்சத்திர வடிவ வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. [3] விநாயகரின் சிற்பமும் கோவிலில் காணப்படுகிறது.
கோயிலில் முக்கிய அம்சமாக ஒரு பெண் எழுதுவது போல் ஒரு சிலையுள்ளது.[1] நடனம் நிலையில் உள்ள உருவம் ஆறாம் விக்கிரமாதித்தனை பாராட்டுவது போல் எழுதுவதாக உள்ளது. [4] [5] கோவிலில் மூன்று அறைகள் உள்ளன. எட்டு தூண்கள் கொண்ட ஒரு நடன அறை, கர்ப்பக்கிருகம் மற்றும் நந்தி அறை. கர்ப்பக்கிருகத்தில் ஒரு லிங்கம் உள்ளது. கர்ப்பகிரகத்தின் நுழைவாயில் தூவாரபாலகர் மற்றும் யாளி வடிவமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவு மேல் பகுதியில் ஒரு கணபதி சிலை உள்ளது. [6]
இந்த கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. 2003 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய அடுக்குகள், தூண்கள் மற்றும் வேறு சிலைகளைச் சேர்த்து பராமரிப்பு பணிகளைச் செய்தது. [5].
காட்சியகம்
தொகு-
நரசிம்மர் சிலை
-
விநாயகர்
-
பெண் சிலைகள்
-
பெண் சிலைகள்
-
பெண் சிலைகள்
-
பெண் சிலைகள்
-
பெண் சிலைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Iswara temple – Jalsangi – Humnabad – Bidar". Archived from the original on 2019-02-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
- ↑ இந்தியா பயணக் குழு - ஜலசங்வி
- ↑ ஜலசங்வி கோவிலின் படம்
- ↑ இஃபிட்., தேவர்கொண்டரேடி, ஹனுமாசி கோகி, (எட்) கன்னடா பல்கலைக்கழகம் எபிகிராபிகல் தொடர் VIII, ப 2
- ↑ 5.0 5.1 "Chalukya era sculpture restored, but temple loses original glory". http://www.newindianexpress.com/states/karnataka/2012/dec/03/chalukya-era-sculpture-restored-but-temple-loses-original-glory-430405.html.
- ↑ Karnataka's Rich Heritage - Art and Architecture.
வெளி இணைப்புகள்
தொகு- Karnataka State Gazetteer, Bidar District, (Ed) K.Abhishankar; Bangalore, 1977. pp. 576-577.