சலாலுதீன் அக்கானி

மௌலாவி ஜலாலுதீன் ஹக்கானி (Jalaluddin Haqqani, جلال الدين حقاني) (பிறப்பு c. 1950), சிராஜுதீன் அக்கானியின் தந்தை, ஓர் ஆப்கானித்தான் படைத்தலைவராக 1980களில் சோவியத் படைகளுக்கு எதிராக, முக்கியமாக மஜிஸ்ட்ரல் நடவடிக்கையின்போது, போரிட்டவர். போருக்குப் பின்னர் ஹமித் கர்சாய் குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்றபோது இவரையே ஆப்கன் பிரதமராக பதவியேற்க அழைத்திருந்தார். இவர் பஷ்டூன் இனமான ஜத்ரனைச் சேர்ந்தவர்.

ஜலாலுதீன் ஹக்கானி
Jalaluddin Haqqani
جلال الدين حقاني
c.1950
சார்பு அக்கானி பிணையம், முஜாஹிதீன்
சேவை ஆண்டு(கள்) 1980'களிலிருந்து இன்றுவரை
சமர்/போர்கள் ஆப்கானித்தானில் சோவியத் சமர்
  • மஜிஸ்ட்ரல் நடவடிக்கை
  • கோஸ்ட் முற்றுகை
  • உர்குன் முற்றுகை
  • ஜாஜி சண்டை
  • குன்று 3234க்கான சண்டை

பயங்கரவாதத்தின் மீதான போர்:

  • ஆப்கானித்தான் போர் (2001 முதல் இன்றுவரை)
  • வட மேற்கு பாக்கித்தானியப் போர்
உறவினர் சிராஜுதீன் அக்கானி (மகன்)

அண்மைக்காலத்தில், தலிபான்சார்பு ஆப்கன் மற்றும் பாக்கித்தான் போராளிகளுக்குத் தலைவராக உள்ளார்.[1] இவர் இந்த மண்டலத்திற்கு தற்கொலைத் தாக்குதல் நெறிகளை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறார்.[2][3] மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடும் அக்கானி பிணையத்திற்கு தலைவராக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. Syed Salaam Shahzad (2004-05-05). "Through the eyes of the Taliban". Asia Times. http://www.atimes.com/atimes/Central_Asia/FE05Ag02.html. பார்த்த நாள்: 2009-02-10. 
  2. Return of the Taliban, PBS Frontline, October 3, 2006
  3. A. Gopal, Who are the Taliban? in: Nation, Volume: 287 Issue: 21 (December 22, 2008) p20

வெளியிணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாலுதீன்_அக்கானி&oldid=2694177" இருந்து மீள்விக்கப்பட்டது