சல்பிலிமைன்

சல்பிலிமைன் (Sulfilimine) என்பது கந்தகமும் நைட்ரசனும் ஒர் இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு உருவாகும் ஒரு வகையான வேதிச் சேர்மமாகும். H2S=NH என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட மூலச் சேர்ம்மான சல்பிலிமைன் பிரதானமாக கருத்தியில் நிலையில் உள்ள சேர்மமாகும். மெத்தில்பீனைல்சல்பாக்சிமைன், S,S-டைபீனைல்சல்பிலிமைன் போன்ற சேர்மங்கள் எளிய எடுத்துக் காட்டுகளாகும்.

டைபினைல்சல்பிமைடு (Ph2S=NH) மூலக்கூறின் பந்துக் குச்சி மாதிரி [1]
மெத்தில்-பீனைல்சல்பாக்சிமைன், ஒரு கந்தக(VI) சேர்மமும் S,S-டைபீனைல்சல்பிமைன், ஒரு கந்தக(IV) சேர்ம்மும்

தயாரிப்பு

தொகு

பெரும்பாலான சல்பிலிமைன்கள் எலக்ட்ரானைத் திரும்பப்பெரும் குழுவுடன் என்-பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்களாகும். குறிப்பாக இவை தயோ ஈதர்களை ஒரு காரத்தின் முன்னிலையில் குளோரமீன்-டிபோன்ற மின்னணுகவர் அமீன் வினையாக்கிகளுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து தயாரிக்கப்படுகின்றன :[2]

R2S + ClNHTs → R2S=NTs + HCl.

மின்னணுகவர் கந்தகச் சேர்மங்களுடன் அமீன்களை வினைப்படுத்தி தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும். இமிடோசல்போனியம் வினையாக்கிகள் அமீன்களால் தாக்கப்படக்கூடிய "Me2S2+" அயனிகளுக்கு மூலங்களாகச் செயல்படுகின்றன.

புரதங்களில் சல்பிலிமைன் பிணைப்புகள்

தொகு

சல்பிலிமைன் பிணைப்புகள் செல் வெளியில் கொலாசென் IV இழைகளை நிலைப்படுத்துகின்றன [3]. இவை 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கலாம் [4]. இப்பிணைப்புகள் ஐதராக்சிலிசின்களையும் மெத்தியோனின் எச்சங்களையும் அடுத்துள்ள பாலிபெப்டைடு இழைகளுடன் சகப்பிணைப்பாகப் பிணைத்து பெரிய கொலாசென் முப்படிகளாக உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. The preparation and structure of novel sulfimide systems; X-ray crystal structures of 1,4-(PhS{NH})2C6H4(and dihydrate), 1,2-(PhS{NH})(PhS)C6H4•H2O and of [Ph2SNH] and its hydrate Mark R. J. Elsegood, Kathryn E. Holmes, Paul F. Kelly, Jonathan Parr and Julia M. Stonehouse New J. Chem., 2002, 26, 202 - 206. எஆசு:10.1039/b103502a
  2. Gilchrist, T. L.; Moody, C. J., "The chemistry of sulfilimines", Chem. Rev. 1977, 77, 409-435. எஆசு:10.1021/cr60307a005
  3. "A sulfilimine bond identified in collagen IV.". Science 325 (5945): 1230–1234. September 4, 2009. doi:10.1126/science.1176811. பப்மெட்:19729652. பப்மெட் சென்ட்ரல்:2876822. Bibcode: 2009Sci...325.1230V. http://www.sciencemag.org/cgi/content/full/325/5945/1230. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பிலிமைன்&oldid=3441251" இலிருந்து மீள்விக்கப்பட்டது