சல்போசெலீனைடு

உலோக சல்பைடுகள், உலோக செலீனைடுகள் இரண்டையும் பெற்றுள்ள சேர்மங்கள்

சல்போசெலீனைடு (Sulfoselenide) என்பது வேதியியலில் உலோக சல்பைடுகள், உலோக செலீனைடுகள் இரண்டையும் பெற்றுள்ள சேர்மங்களைக் குறிக்கிறது. ஏனெனில் உலோக சல்பைடுகளும் உலோக செலீனைடுகளும் ஒரே விதமான படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே விதமான கரைதல் திறனைக் கொண்டு திண்மக் கரைசல்களை உருவாக்குகின்றன. செலீனைடின் (Se2−) அயனி ஆரத்தைக் காட்டிலும் சல்பைடின் அயனி ஆரம் மிகவும் குறைவு என்பதால் கரைதல் வீதம் கட்டுப்படுத்தப்படுகிறது. உதாரணமாக பைரைட்டு கனிமம் சிறிய சதவீத அளவுக்கு மட்டுமே கந்தகத்திற்குப் பதிலாக செலீனியத்தை ஏற்ருக் கொள்கிறது. காட்மியம் சல்பைடுக்கும் காட்மியம் செலீனைடுக்கும் இடையில் இவ்வேறுபாடு பெரிய அளவில் காணப்படுகிறது. CdS மஞ்சளாகவும் CdSe சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. காட்மியத்தின் சல்போசெலீனைடுகள் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகின்றன. கலைஞர்கள் இதனை நிறமியாகப் பயன்படுத்துகிறார்கள் [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Hugo Müller, Wolfgang Müller, Manfred Wehner, Heike Liewald "Artists' Colors" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_143.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்போசெலீனைடு&oldid=3361880" இலிருந்து மீள்விக்கப்பட்டது