சவர்க்காரம்

துவைப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படும் பொருள்.
(சவர்க்காரக்கட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வழலை (soap, சோப்பு) என்பது அழுக்கைக் கழுவுவதற்கு நீருடன் சேர்த்து உபயோகமாகும் பொருளாகும். பொதுவாகக் கட்டிகளாகக் கிடைக்கிறது. தடித்த திரவ வழலைகளும் உள்ளன. கி.மு. 2800 ஆம் ஆண்டளவில் இருந்து வழலை பயன்படுவதாகத் தெரிகிறது.

வழலைக் கட்டியொன்று

வரலாறு

தொகு

வழலை கிமு 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்களும், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் நடுத்தர வயதினர் இதனைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும், 15ம் நூற்றாண்டுக்குப் பிறகு இடலை எண்ணெயை மூலப் பொருளாகக் கொண்ட வழலைகள் விற்பனைக்கு வந்த பிறகு அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆங்கில ஆதிக்கத்தின் கீழிருந்த அமெரிக்க மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழலைகளைச் செய்து பயன்படுத்தி கொண்டனர். ஆங்கில ஆதிக்கம் முடிவுக்கு வந்த போது சிறு முதலீடுகளில் செய்து கொண்டிருந்தவர்கள் அதை தொழிற்சாலையாக மாற்றி உற்பத்தியை பெருக்கினர். இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக துணி துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திய பணக்காரர்கள் கூட இந்த வழலைகளை வாங்க நேரிட்டது. இந்த காலகட்டத்தில் இதன் விற்பனை அதிகரித்தது.

மூலப்பொருட்கள்

தொகு

சோப்பானது சில வேதிப் பொருட்களின் முக்கிய கலவையாகும். முக்கியமாக சோப்பின் ஒவ்வொரு மூலக்கூறும் ஹைட்ரோகார்பன் சங்கிலி மற்றும் கொழுப்பு அமிலங்களின் கலவையாக உள்ளது. இவைதான் துணிகளின் அழுக்கை போக்குவதில் பிரதான வேலை செய்கின்றன. நீரில் நேரடியாக கரையும் கொழுப்பு அமிலங்கள் ஹைட்ரோகார்பன் துணையுடன் துணியிலுள்ள அழுக்கை நீக்க நேரடியாக நீக்குகின்றன. மூலக்கூறுகள் தங்கள் வேலையை செய்தாலும் துணியை நீரில் அலசுவது அவசியமாகிறது.

சோப்பை பயன்படுத்தி துணி துவைப்பதன் கஷ்டத்தை ,நாம் கடின நீர் பயன்படுத்தும்போது உணர முடியும். கடின நீரில் உள்ள கால்சியம். மாங்கனீஸ், மெக்னீசியம். இரும்பு போன்ற தாது பொருட்கள் சோப்பின் மூலக்கூறுடன் வேதி வினை புரிந்து, எளிதில் நீரில் கரையாத ப்ரிசிபிடேட் என்னும் தயிர் போன்ற பொருளை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே துணிகளில் அழுக்கை போக்குவது சிரமமாகிறது.

சோப்பின் மூலப் பொருட்களில் ஹைட்ரோகார்பன் தாவரம் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்பட்டாலும், டிடர்ஜன்ட் போன்ற மற்ற சில பொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படுகிறது. சல்பூரிக் அமிலமானது ஹைட்ரோகார்பன் உடன் மூலக்கூறுகளை உருவாக்க போதுமான அளவு சேர்க்க படுகிறது.

பெரிய அளவிலான நிறுவனங்களில் தொடர் உற்பத்திக்காக கொழுப்பை தொடர்ந்து போதுமான சேர்க்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இரு தொழில் நிறுவனங்களோ பாரம்பரியமான பேட்ச் முறைப்படி உற்பத்தி செய்கின்றன. இதில் கோல்டு ப்ராசெஸ், செமி பாயில்டு ஹாட் ப்ராசெஸ், புல்லி பாயில்டு ஹாட் ப்ராசெஸ் என மூன்று முறைகளில் சோப்பானது உற்பத்தி செய்யப்படுகிறது.

கோல்டு ப்ராசெஸ்

தொகு

இந்த முறையில் சோப் செய்யக்கூட நமக்கு அடிப்படையில் வெப்பம் தேவைப்படுகிறது .இந்த வெப்பம் கூட போதுமான அளவு சேர்க்கப்படும் கொழுப்பை உருக வைக்க பயன்படுகிறது. இவ்வாறு உருக வைக்க படும் கொழுப்பு சிறிது நேரம் வேத்வேதுப்பாக வைக்கப்பட்டு பின் அதனுடன் ஹைட்ராக்சைடு சேர்த்து சோப் செய்யப்படுகிறது. 12-48 மணி நேரத்திற்கு பிறகு இந்த சோபை பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் இவை பல வாரங்கள் வைத்து பயன்படுத்த உகந்தவை அல்ல.

இம்முறையில் மூலப்பொருட்கள் அளவீடு மற்றும் விகிதங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மூலப்பொருட்களின் அளவீடுகள் சில வரை படங்களின் உதவியுடன் உற்பத்தியின் போது கண்காணிக்கப்படுகிறது. ஒருவேளை இவற்றின் அளவீடுகள் ஏற்படும் மாற்றங்கள் பயனரின் தோல் எரிச்சல் அல்லது பிசுபிசுப்பு தன்மை போன்றவை ஏற்படும்.

ஹாட் ப்ராசெஸ்

தொகு

இம்முறையில் சோப்பானது வெப்பத்திற்கு எதிராக எதிர்வினை கொடுப்பதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது .இங்கு கோல்டு ப்ராசெஸ் போலல்லாமல் சோப் ஆயிலானது ப்ராசெஸ் முடியும் தருவாயில் முழுமையாக சோப்பாக மாறுகிறது. ஹைட்ராக்சைடு மற்றும் கொழுப்புகள் 80 முதல் 100 டிகிரி வெப்ப நிலையில், சோப் நிலை வரும் வரை கொதிக்க வைக்க படுகின்றது. பின்னர் மூலக்கூறுகளின் சரிவிகித கலவைகள் சரி பார்த்த பின் சோப்பாக தயார் ஆகிறது.

புல்லி பாயில்டு ஹாட் ப்ராசெஸ் முறையில் சோப் தயாரிப்பது என்பது ஹைட்ராக்சைடு மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றின் சரிவிகித கலவையை சோதனை செய்து உறுதி செய்த பின்னரே ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கலவை 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொதிக்க வைக்கப் பட்டு பின்னர் போதுமான அளவு உப்பு சேர்க்கப் படுகிறது. இந்த உப்பானது ஒப்பின் அதிகப்படியாக உள்ள திரவத்தை, மாசுப் பொருட்கள், கிளிசெரின் போன்ற தேவையற்ற பொருட்களுடன் வடிக்கட்டி வெளியேற்றுகிறது.

அச்சு

தொகு

பொதுவாக நிறுவனங்கள் சிலிகான் மற்றும் பிளாஸ்டிக் அச்சுகளை பயன்படுத்தி சோப்பிற்கு வடிவம் கொடுக்கின்றன .சிறு தொழில் செய்வோர் பிளாஸ்டிக் பிலிம் ஒட்டப்பட்ட அட்டை பெட்டிகளை கொண்டு தயார் செய்கின்றனர். அனால் இவ்விருவகை தொழில் முனைவோரும் சோப்பை நீண்ட பார்களாக எடுத்து பின் குறிப்பிட்ட அளவிற்கு வெட்டி கொள்கின்றனர்.

தூய்மைபடுத்துதல்

தொகு

நாம் முன்னரே கூறியபடியே உப்பை சேர்ப்பதன் மூலம் சோப்பின் அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான மூலக்கூறுகளின் அளவறிந்து அவற்றை நீக்குவதன் மூலம் தூய்மைப்படுத்தலாம். இந்நிலையில் சோப் அதிகமான நீரைக் கொன்டிருந்தால் ஸ்ப்ரே ட்ரையர் மற்றும் வேக்குவம் ட்ரையர் முறையில் இந்த நீரானது அகற்றப்படுகின்றது.

உலர்ந்த நிலையில், 6 முதல் 12 சதவிகித ஈரப்பதத்தில் சிறு சிறு துகள்களாக சுருக்கப்பட்டு பின்னர் பார் வடிவத்திற்கு கொண்டு செல்லப் பயன்படுகிறது. இவ்வாறு செல்லும் வழியில் இத்துடன் வாசனை திரவியங்கள் மற்றும் சில பொருட்களும் சேர்க்க படுகின்றன. பின் ரிபைனர் மெஷினுக்கும் அங்கிருந்து ரோலர் மில்லுக்கு எடுத்து செல்லப்பட்டு அரை திரவ நிலைக்கு மாற்றப்படுகிறது. பின் மற்றுமொரு ரிபைனர் வழியாக வேக்குவம் சேம்பருக்கு செலுத்தப்பட்டு தேவையற்ற வாயுக்கள் பிரிக்கப்படுகின்றன. பின்னர் நீண்ட பார்களாக வெளி இழுக்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளில் வெட்டி எடுக்கப படுகின்றன.

சில சமயம் மண் மற்றும் படிகக்கல் ஆகியவை சோப்புடன் சேர்க்கப் படுவது உண்டு. இவை கடினமான கரைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை சோப்புகள் exfoliation சோப்புகள் என்றழைக்கபடுகின்றன.

Nanascopic எனப்படும் உலோகங்கள் சோப்பின் நிறம் மற்றும் ஆண்டி – பாக்டிரியல் குணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில வகை சோப்புகளில் சேர்க்கப்படும். Titanium பவுடர் வெள்ளை துணிகளை வெளுக்க பயன்படும் சோப்புகளில் சேர்க்கபடுகின்றன. இதிலுள்ள நிக்கல், அலுமினியம், மற்றும் சில்வர் போன்ற உலோகங்கள் துணியிலுள்ள பாக்டிரியாக்களை தங்களின் electron robbing குணத்தால் நீக்கி அழித்துவிடுகின்றன .துணி வெளுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு பாக்டிரியாக்கள் பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்சனரியில் சவர்க்காரம் விளக்கம் காண்க
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவர்க்காரம்&oldid=3702690" இலிருந்து மீள்விக்கப்பட்டது