சவுத்ரி முயீன்-உதின்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சவுத்ரி முயீன்-உதின் (Chowdhury Mueen-Uddin வங்காள மொழி: চৌধুরী মঈনুদ্দীনபிறந்தார் ; 27 நவம்பர் 1948 ஆம் ஆண்டு பிறந்தார்) என்பவர் வங்காளதேச விடுதலைப் போரில் பாக்கித்தான் ராணுவத்துடன் இணைந்து வங்கதேச அறிவாளிகள் படுகொலையில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டவர் ஆவார்.[1] பின் வங்கதேசத்தின் விடுதலைக்குப் பின் இதில் இருந்து தப்பிப்பதற்காக இவர் பிரித்தானியக் குடியுரிமை பெற்றார்.[2][3]
சவுத்ரி ஐரோப்பாவின் இஸ்லாமிய மன்றத்தின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீவிரவாத அமைப்பாக கருதப்படுகிறது.[4][5] மேலும் இவர் முஸ்லீம் எய்ட் என்பதின் அறங்காவலர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.[6]
3 நவம்பர் 2013 அன்று, சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் வங்களதேசத்தில் அமைக்கப்பட்டது. பின் 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளப் படுகொலை பற்றிய வழக்கினை விசாரிக்கும் அதிகாரம் அதற்கு வழங்கப்பட்டது. அப்போது 1971 இல் தாக்க்க பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த 9 ஆசிரியர்கள், ஆறு பத்திரிக்கையாளர்கள் மற்றும் 3 மருத்துவர்கள் ஆகியோர் இவரால் கொல்லப்பட்டதாகக் கூறியது.[7][8][9][10] 1971 ல் சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே இவர் பங்களாதேஷை விட்டு வெளியேறி ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[11] இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.[12]
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை (வங்காளதேசத்தில் இருந்து முதல் நபர் ) உருவாக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இவர் போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டார். 1972 ஆம் ஆண்டில், த நியூயார்க் டைம்ஸ் இவர் மறைமுகமாக இயங்கும் தீவிரவாத நோக்கம் கொண்ட முஸ்லிம் அமைப்புகளின் தலைவராக கருதப்பட்டதாக கூறியது. 1995 இல், டேவிட் பெர்க்மேன் தயாரித்த ஒரு ஆவணப்படம், பிரித்தானிய தொலைக்காட்சி சேனலான சேனல் 4 இல் வெளியானது. அது 1971 வங்களாதேச இனப்படுகொலை பற்றியது ஆகும். அந்த ஆவணப் படத்தில் இவர் அந்த படுகொலையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[13][14]
தொழில்
தொகு1971 ஆம் ஆண்டில், மியூன்- உதின் டெய்லி புர்போடேஷில் ஒரு பத்திரிகையாளராக பனியில் சேர்ந்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 ஆம் ஆண்டில், த நியூயார்க் டைம்ஸ் இவர் மறைமுகமாக இயங்கும் தீவிரவாத நோக்கம் கொண்ட முஸ்லிம் அமைப்புகளின் தலைவராக கருதப்பட்டதாக கூறியது.[1] 1971 இல் சுதந்திரம் பெற்ற சிறிது நேரத்திலேயே அவர் வங்களாதேசத்தினை விட்டு வெளியேறினார். இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் வழியாக ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார் [15][16] ஐக்கிய இராச்சியத்தில் அவர் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க முடிந்தது.[8][17]
இலண்டனின் தேசிய சுகாதார சேவையில் (என்.எச்.எஸ்) முஸ்லீம் ஆன்மீக பராமரிப்பு ஏற்பாட்டின் இயக்குநராகவும், ஹெல்த்கேர் சாப்ளேன்சி (எம்.எஃப்.ஜி.எச்.சி) க்கான மல்டி ஃபெய்த் குழுமத்தின் உறுப்பினராகவும், முஸ்லீம் எய்ட் அறங்காவலராகவும் மியூன்-உதின் இருந்தார்.[18][19] தற்போது அவர் இங்கிலாந்தின் குடிமகனாக உள்ளார்.[2]
போர்குற்ற விசாரணை
தொகு1995 ஆம் ஆண்டில் டேவிட் பெர்க்மேன் என்பவர் எழுதி, இயக்கிய போர் குற்றங்கள் கோப்பு என்ற ஆவணப்படம் பிரித்தானிய தொலைக்காட்சி சேனலான சேனல் 4 இல் 1971 வங்காளதேச இனப்படுகொலை பற்றி ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆவணப் படத்தில் 1971 வங்காளதேச விடுதலைப் போரின்போது அல்-பாதர் என்ற பாகிஸ்தான் சார்பு துணை ராணுவப் படையில் இவர் உறுப்பினராக இருந்ததாகவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மியூன்-உதின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "NY Times finds journalist link to intellectuals' massacre". The Daily Ittefaq. 13 December 2012 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923204725/http://www.clickittefaq.com/more-stories/ny-times-finds-bengali-journalist-link-to-intellectuals-massacre/.
- ↑ 2.0 2.1 "Mueen-Uddin's extradition unlikely". bdnews24.com. 4 November 2013. http://bdnews24.com/bangladesh/2013/11/04/mueen-uddin-s-extradition-unlikely.
- ↑ "Leading British Muslim leader faces war crimes charges in Bangladesh". The Telegraph. 15 April 2012. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/bangladesh/9204831/Leading-British-Muslim-leader-faces-war-crimes-charges-in-Bangladesh.html. பார்த்த நாள்: 6 November 2013.
- ↑ Andrew Gilligan, Backlash at the mosque பரணிடப்பட்டது 2010-03-17 at the வந்தவழி இயந்திரம், Daily Telegraph, 13 March 2010
- ↑ Andrew Gilligan, "IFE: not harmless democrats", The Guardian, 4 March 2010
- ↑ "Governance". Muslim Aid. Archived from the original on 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 14 December 2010.
- ↑ "HANG Mueen, Ashraf". The Daily Star. 4 November 2013. http://www.thedailystar.net/beta2/news/hang-mueen-ashraf/. பார்த்த நாள்: 15 November 2013.
- ↑ 8.0 8.1 "ICT-2 to pass order on Chy Mueen, Ashraf on May 2". The Independent. 29 April 2012. http://theindependentbd.com/index.php?option=com_content&view=article&id=166846:ict-2-to-pass-order-on-chy-mueen-ashraf-on-may-2&catid=172:miscellaneous&Itemid=202. பார்த்த நாள்: 2 May 2013.
- ↑ "Charges against Mueen, Ashraf accepted". The Daily Star. 2 May 2013. http://www.thedailystar.net/beta2/news/charges-against-mueen-uddin-ashrafuzzaman-accepted/. பார்த்த நாள்: 2 May 2013.
- ↑ "Ashraf, Mueen to hang for mass murder". Bdnews24.com. 3 November 2013. http://bdnews24.com/bangladesh/2013/11/03/ashraf-mueen-to-hang-for-mass-murder. பார்த்த நாள்: 3 November 2013.
- ↑ "Killers at home turn leaders abroad". The Daily Star. 4 November 2013. http://www.thedailystar.net/beta2/news/killers-at-home-turn-leaders-abroad/. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Bangladesh convicts UK-based Muslim leader for war crimes". Dawn. 3 November 2013. http://dawn.com/news/1053843/bangladesh-convicts-uk-based-muslim-leader-for-war-crimes. பார்த்த நாள்: 15 November 2013.
- ↑ "UK documentary narrated Chowdhury Mueen's involvement". Dhaka Tribune. 4 November 2013 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160426233052/http://www.dhakatribune.com/law-amp-rights/2013/nov/04/uk-documentary-narrated-chowdhury-mueen%E2%80%99s-involvement.
- ↑ "Defender of Justice". The Daily Star. 20 April 2012. http://archive.thedailystar.net/magazine/2012/04/03/profile.htm.
- ↑ "Ashraf, Mueen to hang for mass murder".
- ↑ Nelson, Dean. "British Muslim leader sentenced to death in Bangladesh".
- ↑ "Chowdhury Mueen-Uddin to be charged with war crimes". Daily Telegraph. 16 April 2012 இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160217105313/http://blogs.telegraph.co.uk/news/andrewgilligan/100151195/chowdhury-mueen-uddin-to-be-charged-with-war-crimes-5/. பார்த்த நாள்: 17 October 2012.
- ↑ Gilliat-Ray, Sophie (2010). Muslims in Britain. Cambridge University Press. p. 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-53688-X.
- ↑ Barker, Eileen (2008). The Centrality of Religion in Social Life: Essays in Honour of James A. Beckford. Ashgate Publishing. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7546-6515-1.