சவுல்
சவுல் (Saul; ((lang-he|שָׁאוּל}}; அரபு மொழி: طالوت; கிரேக்க மொழி: Σαούλ; இலத்தீன்: Saul) (ஏறக்குறைய கி.மு 1079 – 1007) என்பவர் ஒன்றிணைந்த இசுரவேல் அரசின் முதலாவது அரசன் ஆவார்.[1] இவர் இறைவாக்கினர் சாமுவேலினால் அரசனாக நியமிக்கப்பட்டு, கீபாவிலிருந்து அரசாட்சி செய்தார். கில்போ மலையில் நடைபெற்ற போரில் பிலிஸ்தியர்களிடம் பிடிபடுவதைத் தவிர்க்க வாள் மீது வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டார். இப்போரில் அவருடைய மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர். இவரைத் தொடர்ந்து அவரின் மகன் இசபோத் மற்றும் அவருடைய மருமகன் தாவீது ஆகியோர் ஆட்சி செய்தனர். சவுலின் வாழ்வு, ஆட்சி பற்றிய விபரங்கள் சாமுவேல் நூலில் காணப்படுகின்றது.
சவுல் | |
---|---|
இசுரவேலின் அரசன் | |
David Plays the Harp for Saul, by ரெம்பிரான்ட், c. 1658. | |
ஆட்சி | கி.மு. ஏ. 1050 — 1010 |
தாவீது (யூதா), இசபோத் (இசுரவேல்) | |
தந்தை | கீஸ் |
பிறப்பு | கி.மு 1079 கிபா |
இறப்பு | கி.மு ஏ. 1010 (72 வயது) கில்போ மலைப் போர் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kingdom of Israel". Archived from the original on 2018-11-06. பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.