இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)

(இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீதித் தலைவர்கள் நூலின்படி சவுலின் ஒன்றிணைந்த முடியாட்சிக்கு முன்பு இசுரயேலர் கோத்திரங்கள் நீதித் தலைவர்கள் என்பவர்களின் கீழ் கூட்டுக் குழுவாக வாழ்ந்தனர். ஆயினும் நீதித் தலைவர் அபிமெலேக் முதலாவது இசுரேலிய அரசராக அறிவிக்கப்பட இருந்தார். ஆகவே அவர் தூபால் போரில் கொல்லப்படும் வரை இசுரவேலை நீதி செய்து ஆண்டார். ஏறக்குறைய கி.மு. 1020 இல் வெளியாரின் பாரிய அச்சுருத்தலால் இசுரயேலர் கோத்திரங்கள் ஒன்றிணைந்த முடியாட்சியை உருவாக்க ஐக்கியப்பட்டனர். சாமுவேல் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்த சவுலை கிட்டத்தட்ட கி.மு. 1026 இல் முதலாவது இசுரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தார். ஆனால் தாவீது கிட்டத்தட்ட கி.மு. 1009–1000 இல் பலமான ஒன்றிணைந்த இசுரயேலிய முடியாட்சியை உருவாக்கினார்.

ஐக்கிய இசுரவேல் யூத அரசு
ממלכת ישראל המאוחדת
United Kingdom of Israel and Judah
கி.மு. 1030–கி.மு. 930
இசுரேல்அமைவிடம்
தலைநகரம்கிப்பா (கி.மு. 1030–1010)
மகனாயிம்(1010–1008)
எபிரோன் (1008–1003)
எருசலேம் (1003–930)
அரசாங்கம்முடியாட்சி
அரசர் 
• கி.மு. 1030–1010
சவுல்
• 1010–1008
இஸ்பால்
• 1008–970
தாவீது
• 970–931
சாலொமோன்
• 931–930
ரெகோபோவாம்
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
கி.மு. 1030
கி.மு. 930
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIL
முந்தையது
பின்னையது
ஒன்றுபட்ட இசுரவேல் குலங்கள்
யூத அரசு
இசுரவேல் அரசு (சமாரியா)

தாவீது அரசர் கி.மு. 1006 இல் நாட்டின் தலைநகராக எருசலேமை ஏற்படுத்தினார்.[1] இதற்கு முன் எபிரோன் தாவீதிற்குக் கீழ்ப்பட்ட யூத மற்றும் பெஞ்சமினின் தலைநகராகவும், கிப்பா சவுலுக்குக் கீழ்ப்பட்ட ஐக்கிய முடியாட்சி தலைநகராகவும் இருந்தது.


உசாத்துணை

தொகு