சவூதி விண்வெளி ஆணையம்
சவூதி விண்வெளி ஆணையம் (Saudi Space Commission) சவூதி அரேபியா நாட்டின் ஒரு சுயாதீன அரசாங்க நிறுவனமாகும். 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 அன்று சவுதி அரசாங்கத்தின் உத்தரவால் சவூதி விண்வெளி ஆணையம் நிறுவப்பட்டது. விண்வெளித் துறையில் தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்பார்த்து சவுதி விண்வெளி ஆணையம் நிறுவப்பட்டது.
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 27 திசம்பர் 2018 |
ஆட்சி எல்லை | சவூதி அரேபியா அரசாங்கம் |
தலைமையகம் | சவூதி அரேபியா |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | https://ssc.gov.sa |
ஒரு முற்போக்கான வாழ்க்கைத் தரத்தை நோக்கி சவூதி அரேபியா நகர்ந்து வருவதால் சவூதி விண்வெளி ஆணையம் தனது குடிமக்களுக்கு சிறந்த, பாதுகாப்பான சூழல்களை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த பார்வையை முன்வைக்கிறது. அதே நேரத்தில் இலாபகரமான பொருளாதார மற்றும் பணம் வரும் துறை கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளையும் இவ்வாணையம் தீவிரமாக செயல்படுத்துகிறது. சவூதி விண்வெளி ஆணையம் விண்வெளி தொடர்பான அபாயங்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு சேவை செய்யும் முதன்மை நோக்கங்களை உருவாக்க முயற்சி செய்கிறது.
பணிகள்
தொகு- தேசிய விண்வெளிக் கொள்கையை வகுத்தல் மற்றும் திட்டமிடுதல்
- விண்வெளி தொடர்புடைய ஆய்வுகள்
- விண்வெளியுடன் தொடர்புடைய பொருட்களுக்கான தொழிற்சாலைகள் நிறுவுதல்
- தேசிய செயற்கைக் கோள் தொழிற்சாலைகளை முறைப்படுத்துதல்
- ஏவூர்தி தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல்
- தேசிய விண்வெளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்[1]
அப்துல்லா அல்சுவாகா இந்த ஆணையத்திற்கு தலைமை தாங்குகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Us - Saudi Space Commission". saudispace.gov.sa (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.