சவ்வு கடத்தல் புரதம்
சவ்வு கடத்தல் புரதம் (membrane transport protein) அல்லது சுருக்கமாக கடத்தி (transporter) எனப்படும் சவ்வுப் புரதமானது[1] அயனிகள் மற்றும் சிறு அல்லது பெரும் மூலக்கூறுகளான பிற புரதங்களை உயிரியச்சவ்வின்வழிக் கடத்துதலில் ஈடுபட்டுள்ளது[2]. இவ்வகையான கடத்தும் புரதங்கள் திரவியங்களைக் கடத்தும் சவ்வினுள்ளும், அதன் நெடுக்கத்திலும் (வீச்சிலும்) உள்ள ஒருங்கிணைந்தச் சவ்வுப் புரதங்களாகும் (integral membrane proteins). இப்புரதங்கள் திரவியங்களைக் கடத்துவதில் எளிதாக்கிய விரவல் (facilitated diffusion) அல்லது செயல்மிகு பெயர்ச்சி (active transport) மூலமாக துணை செய்கின்றன. இவ்வித இயக்க முறைகள் "கடத்தி-மூலமானக் கடத்தல்" என்றழைக்கப்படுகின்றது[3][4]. ஒவ்வொரு கடத்தல் புரதமும் ஒரேயொரு பொருளையோ அல்லது ஒரு குழுமத்தில் உள்ள ஒரேமாதிரியான பொருள்களையோ ஏற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கடத்தல் புரதங்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ மெஷ் Membrane+transport+proteins
- ↑ Sadava, David, et al. Life, the Science of Biology, 9th Edition. Macmillan Publishers, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4292-1962-9. pg 119.
- ↑ Thompson, Liz A. Passing the North Carolina End of Course Test for Biology. American Book Company, Inc. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59807-139-4. pg. 97.
- ↑ Carrier mediated transport, Answers.com
- ↑ Sadava, David, Et al. Life, the Science of Biology, 9th Edition. Macmillan Publishers, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4292-1962-9. pg 119.