சாகர் சரோவர் மற்றும் மெகரூன் ரூனி கொலை வழக்கு

சாகர் சரோவர் மற்றும் மெஹருன் ரூனி ( சாகர்-ரூனி கொலை வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பிரபலமான, வங்காளதேசப் பத்திரிகையாளரான இணையரின் தற்போது வரை தீர்க்கப்படாத இரட்டை கொலை வழக்கு பற்றியது ஆகும். 11 பிப்ரவரி 2012 அன்று வங்காளதேசத்தில் டாக்கா குடியிருப்பில் இருந்த போது கணவன் மனைவியான இருவரும் குத்திக் கொல்லப்பட்டனர். ஆனால் தற்போதுவரை அதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகவில்லை [1][2][3][4][5][6] இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாத நிலையில் உள்ளது .டி.என்.ஏ பரிசோதனையில் இரண்டு பேர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.[7]

இந்த ஜோடியின் கொலை பங்களாதேஷில் உயர்மட்ட அரசியல் மற்றும் ஊடகங்களின் கவனத்தினையும் பரவலாகப் பெற்றது. மேலும் சரோவர் டாய்ச் வெல்லே பத்திரிகையாளராக பணியாற்றியதால் ஜெர்மன் மக்களின் கவனத்தினையும் இந்த கொலை வழக்கு பெற்றது. இந்த வழக்கை ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகை அமைப்புகளும் உன்னிப்பாக கவனித்தன.[8] இந்த தம்பதிகளின் கொலை வழக்கானது முன்பு வங்காளதேசத்தில் சில காரணங்களினால் தனித்தனியாக இருந்த பத்திரிகையாளர்களையும் ,அமைப்புகளையும் ஒன்றிணைத்தது.

வாழ்க்கை வரலாற்று மற்றும் தொழில் தகவல்

தொகு

கோலம் முஸ்தோபா சரோவர் , சாகர் சரோவர் என்று பரவலாக அறியப்பட்டார்.[9] இவரது குடும்பம் பழைய டாக்காவைச் சேர்ந்தது. இவர் டிசம்பர் 2011 ஆம் ஆண்டு முதல் மஸ்ரங்கா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு செய்தி ஆசிரியராக இருந்தார்.[10] இவர் முன்னர் ஜெர்மனியின் பான் நகரில் உள்ள ஜெர்மனின், டாய்ச் வெல்லின் பங்களா சேவையில் நிருபராக , அச்சு வேலை மற்றும் கட்டுரையாளாராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.[11] மேலும் அவரது படைப்புகள் வர்த்தக இதழான பிளாட்ஸ் ஆயில் கிராம் நியூஸிலும் வெளிவந்தன .[12][13][14] அவர் எரிசக்தி நிருபர்கள் மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகவும், எனர்ஜி பங்களா என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.[15][16] சரோவர் FERB இன் 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் இயக்குநராக இருந்தார்.

மெஹருன் நஹர் ரூனி ஏடிஎன் பங்களாவின் மூத்த தொலைக்காட்சி நிருபராக இருந்தார், அங்கு அவர் 2001 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார்.[17] அவர் ஒலிபரப்பு ஊடகங்களில் வேலை செய்வதற்கு முன்பாக சேனல் ஐ மற்றும் சங்பத் மற்றும் ஜுகந்தர் ஆகிய அச்சு ஊடகங்களில் பணியாற்றினார். பங்களாதேஷில் எரிசக்தி பிரச்சினைகள் குறித்தும் அவர் பலமுறை அறிக்கை அளித்தார்.

இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தார், அவர்கள் கொலை செய்யப்பட்டபோது இவருக்கு 5 வயது ஆகும்.

முஸ்லிம்களுக்கான அசிம்பூர் மயானத்தில் பழைய டாக்காவில் இவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.[3][18][19] இது முஸ்லிம்களாக இருக்கும் டாக்கா குடிமக்களுக்கு பரவலாக அறியப்பட்ட கல்லறைகள் இருக்கும் இடம் ஆகும் [20]

இறப்பு

தொகு

திருமணமான பங்களாதேஷ் தம்பதியர், சாகர் மற்றும் ரூனி, டாக்காவின் மேற்கு ராஜா பஜார் பகுதியில் ( மஹல்லா ) ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் தங்கள் 5 வயது குழந்தையுடன் வசித்து வந்தனர். சரோவர் மற்றும் ரூனி கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களது வீட்டில் சில விருதினர்கள் இருந்ததாக அவர்களின் வீட்டில் அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

சூழல்

தொகு

குற்றம்

தொகு

டாக்காவின் அதிகாரப்பூர்வ காவல் துறையின் பதிவுகளின்படி, 2012 பிப்ரவரியில் சாகர்-ரூனி கொலை வழக்கு உட்பட 23 கொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால் ஊடக அறிக்கைகள் அதிகமான கொலைகள் காவல் துறையினரால் கவனத்திற்கு வரவில்லை பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.[21]

குறிப்புகள்

தொகு
  1. "Police: Journalist couple killed in Bangladesh". The Guardian. 11 February 2012. https://www.theguardian.com/world/feedarticle/10088200. பார்த்த நாள்: 7 March 2012. 
  2. "Ex Deutsche Welle journalist victim of brutal stabbing at home in Dhaka". Deutsche Welle. http://www.dw.de/ex-deutsche-welle-journalist-victim-of-brutal-stabbing-at-home-in-dhaka/a-15739227. 
  3. 3.0 3.1 "Journalist couple killed". The Daily Star. 12 February 2012. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=222110. பார்த்த நாள்: 7 March 2012. 
  4. "No case, probe headway". bdnews24.com. 12 February 2012. http://bdnews24.com/bangladesh/2012/02/12/no-case-probe-headway. பார்த்த நாள்: 24 February 2013. 
  5. "Journalist couple murdered in city". New Age. 11 February 2012 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629234141/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2012-02-11&nid=50052. பார்த்த நாள்: 7 March 2012. 
  6. "Sagar Sarwar And Mehrun Runi, Journalist Couple, Killed in Bangladesh". Huffington Post. 11 February 2012. http://www.huffingtonpost.com/2012/02/11/sagar-sarwar-mehrun-runi-killed-journalist-bangladesh_n_1270069.html. பார்த்த நாள்: 7 March 2012. 
  7. "No light in sight in Sagar-Runi murder case even after 3 yrs". The Financial Express. 11 February 2015. http://www.thefinancialexpress-bd.com/2015/02/11/80640. 
  8. Jones, Kristin (27 February 2012). "Bangladeshi journalists call for justice in couple's murder". Committee to Protect Journalists. பார்க்கப்பட்ட நாள் 7 March 2013.
  9. Golam Mustofa Sarowar (11 February 2012). "Golam Mustofa Sarowar – Journalists Killed". Committee to Protect Journalists. பார்க்கப்பட்ட நாள் 24 February 2013.
  10. "BRIEF:Journalist couple murdered in Bangladesh capital". 11 February 2012. 
  11. "Curious case of Sagar-Runi murder". 17 February 2012 இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131228074142/http://nrbblog.com/2012/02/17/sagar-runi-murder/. பார்த்த நாள்: 10 March 2013. 
  12. "Bangladesh licensing round draws 10 bids Bangladesh licensing round draws 10 bids". Platts Oilgram News. 9 May 2008. 
  13. "Bangladesh invites bids for 28 offshore oil blocks". Platts Oilgram News. 19 February 2008. 
  14. "Bangladesh set to launch bid round after new PSC settled". Platts Oilgram News. 20 December 2007. 
  15. "Bangladeshi blogger uncovers arbitrary executions". 26 June 2012. http://www.dw.de/bangladeshi-blogger-uncovers-arbitrary-executions/a-16051321. பார்த்த நாள்: 7 March 2012. 
  16. "We want to know!". Energy Bangla. 10 February 2013 இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130414014943/http://www.energybangla.com/2013/02/10/2518.html#.UTxoxNYyx8E. பார்த்த நாள்: 10 March 2013. 
  17. Meherun Runi (11 February 2012). "Meherun Runi – Journalists Killed". Committee to Protect Journalists. பார்க்கப்பட்ட நாள் 24 February 2013.
  18. Manik, Julfikar Ali (12 February 2012). "Megh now a lonely cloud". http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=222111. பார்த்த நாள்: 7 March 2012. 
  19. "Megh reeling from trauma". 13 February 2012. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=222246. பார்த்த நாள்: 7 March 2012. 
  20. Ahmed, Ershad (26 January 2007). "Dhaka graveyards for Muslims" (blog). பார்க்கப்பட்ட நாள் 8 March 2013.
  21. "Many murders in the month of martyrs" இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130628235032/http://www.daily-sun.com/details_yes_04-03-2012_Many-murders-in-the-month-of-martyrs_74_2_1_1_8.html. பார்த்த நாள்: 7 April 2013.