சாகிதா குவாசி

பாக்கித்தானிய பத்திரிக்கையாளர்

சாகிதா குவாசி (Shahida Qazi) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.[1] பாக்கித்தான் நாட்டில் ஒரு நிருபராக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரேயாவார்.[2] சாகிதா குவாசி 1944 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1963 ஆம் ஆண்டில் கராச்சி பல்கலைக்கழகத்தில் அப்போது புதிதாக நிறுவப்பட்ட இதழியல் துறையில் பதிவுசெய்யப்பட்ட நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண்மணி சாகிதா குவாசி ஆவார்.[2] குவாசி 1966 ஆம் ஆண்டில் டான் செய்திகளில் சேர்ந்தார். இதன்மூலம் பாக்கித்தானில் முதல் பெண் நிருபர் என்ற சிறப்பைப் பெற்றார். பின்னர் 18 வருடங்கள் பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[3][2] கராச்சி பல்கலைக்கழகம் மற்றும் முகமது அலி சின்னா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[4][5][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Propaganda and media manipulation: Political interference hijacking 'truth' in press reporting". The Express Tribune (in ஆங்கிலம்). 2013-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  2. 2.0 2.1 2.2 "'No glass ceiling': The life and times of Shahida Kazi, Pakistan's first woman correspondent". Arab News PK (in ஆங்கிலம்). 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  3. "Call to adopt flexible working hours for women journalists". pakistanpressfoundation.org.
  4. admin. "PPF seminar "Gender Equality Beyond 2005: Building a More Secure Future for Women Journalists" | Pakistan Gender News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  5. "Society's progress depends on safeguarding women rights: CM Sindh". newspakistan.tv. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  6. (in en) The Herald. 2006. https://books.google.com/books?id=Zx0TAQAAMAAJ&q=shahida+qazi. 
  7. (in en) Women's Year Book of Pakistan. Ladies Forum Publications. 1998. https://books.google.com/books?id=AGraAAAAMAAJ&q=shahida+qazi+journalist. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிதா_குவாசி&oldid=3749358" இலிருந்து மீள்விக்கப்பட்டது