சாகித் பர்வேசு
உஸ்தாத் சாகித் பர்வேசு கான் (Shahid Parvez Khan) (பொதுவாக சாகித் பர்வேசு) (பிறப்பு:14 அக்டோபர் 1958) ஒரு இந்துஸ்தானி இசையின் சித்தார் கலைஞராவார். [1] இவர் எட்டாவா கரானாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். "கயாகி ஆங்" என்று அழைக்கப்படும் இவரது இராக மேம்பாடுகளின் குரல்வளர்ப்புக்காக இவர் குறிப்பாக பாராட்டப்படுகிறார். இது சித்தார் மேதை உஸ்தாத் விலாயத் கானால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சித்தார் வகையாக அறிமுகப்படுத்தப்பட்டது. [2]
சாகித் பர்வேசு பர்வேசு | |
---|---|
பிறப்பு | சாகித் பர்வேசு கான் 14 அக்டோபர் 1958 மும்பை, இந்தியா |
பணி | இந்துஸ்தானி இசையில் சித்தார் மேதை |
செயற்பாட்டுக் காலம் | 1965 – தற்போது வரை |
விருதுகள் | பத்மசிறீ விருது, 2012 சங்கீத நாடக அகாதமி விருது, 2006 |
வலைத்தளம் | |
Official site |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇந்தியாவின் மும்பையில் பிறந்த இவருக்கு இவரது தந்தை உஸ்தாத் ஆசிசு கான் பயிற்சி அளித்தார். [2] இவரது தந்தை சித்தார் மற்றும் சுர்பகார் கலைஞரான வாகித் கானின் மகனாவார். [3] [4] வழக்கம்போல, இவரது தந்தை தனது மகனை பல ஆண்டுகளாக சித்தாரில் பயிற்றுவிப்பதற்கு முன்பு குரலிசையிலும், கைம்முரசு இணையிலும் பயிற்சி அளித்தார். [1] மேலும், பாடகரும் சுர்பகார் மற்றும் சித்தார் கலைஞரான தனது மாமா அபீசு கானிடமிருந்து குரலிசை மற்றும் சுர்பகார் பயிற்சியையும் பெற்றார். தில்லி கரனாவின் முன்னு கானிடமிருந்து பல ஆண்டுகளாக கைம்முரசு இணையில் பயிற்சி பெற்றார்.
இம்தாத் கான் (இவரது தாத்தா), இனாயத் கான், வாகித் கான் (இவரது தாத்தா) மற்றும் விலாயத் கான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களை இந்துஸ்தானிய பாரம்பரிய இசையில் இவரது குடும்பத்தினர் உருவாக்கியுள்ளனர். [1]
தொழில்
தொகுஅமெரிக்கா, ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், கனடா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆத்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற இந்திய விழா உட்பட இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து முக்கிய இசை விழாக்களிலும் பர்வேசு கான் நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒரு சிறப்பான செயல்திறன் வாழ்க்கையைப் பெற்றுள்ளார். [1]
விருதுகளும் கௌரவங்களும்
தொகு- 2006 இல் சங்கீத நாடக அகாதமி விருது [5] [2]
- 2012 இல் பத்மசிறீ விருது [6]
- அனைத்திந்திய வானொலி - சிறந்த தரக் கலைஞர்
- சுர் சிரிங்கார்
- குமார் கந்தர்வ சம்மான்
- எம்.எல் கோசர் விருது
மாணவர்கள்
தொகுஇவரது மாணவர்களில் சாகீர் கானும் சமீப் குல்கர்னியும் ஆகியோர் அடங்குவர். [7]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Seven strings to the rainbow: Sitar maestro Ustad Shahid Parvez on music and musicianship". https://www.thehindu.com/arts/music/article495275.ece. பார்த்த நாள்: 12 July 2020.
- ↑ 2.0 2.1 2.2 "Ustad Shahid Parvez Khan mesmerizes audience". https://www.tribuneindia.com/news/archive/ludhiana/ustad-shahid-parvez-khan-mesmerises-audience-634370. பார்த்த நாள்: 13 July 2020.
- ↑ "Sitarist, Massachusetts Symphony to perform in benefit concert for Joy Guru Humanitarian Services in Worcester". telegram.com website. 31 March 2018. https://www.telegram.com/entertainmentlife/20180331/sitarist-mass-symphony-to-perform-in-benefit-concert-for-joy-guru-humanitarian-services-in-Worcester.
- ↑ "Magic happened on stage (Classical Music Festival 2012)". The Daily Star. 1 December 2012. https://www.thedailystar.net/news-detail-259412.
- ↑ "List of all awards (scroll down to read (Instrumental - Sitar) section) for Shahid Parvez". Sangeet Natak Akademi website. 27 July 2011. Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
- ↑ "Padma Shri for Anup Jalota, Dr. V. Mohan, Vanraj Bhatia (also includes award for Shahid Parvez)". The Hindu (newspaper). 25 January 2012. https://www.thehindu.com/news/national/article2832225.ece.
- ↑ Tanvi Salkar (23 June 2009). "Stringing together". Indian Express (newspaper). http://archive.indianexpress.com/news/stringing-together/480038.