சாகினா இட்டூ
சாகினா இட்டூ (Sakina Itoo) (பிறப்பு: திசம்பர் 5, 1970)[1]) காஷ்மீரைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினரான இவர் 1996 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை நூராபாத்து தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] 1999 ஆம் ஆண்டில், இவர் சமூக நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள், ஆய்வுகள், பயிற்சிகள் மற்றும் குறைகளை களைதல் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]
சாகினா இட்டூ | |
---|---|
சமூக நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 2008–2014 | |
ஆளுநர் | நரேந்திரநாத் வோரா |
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2015 | |
ஆளுநர் | நரேந்தர் நாத் வோரா |
தொகுதி | நூராபாத்து |
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–2002 | |
ஆளுநர் | கிரிஷ் சந்திர சக்சேனா |
தொகுதி | நூராபாத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 5, 1970 குல்காம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
பெற்றோர் |
|
தெற்கு காஷ்மீருக்கான தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார்.[5] 2008 ஆம் ஆண்டில் ஒமர் அப்துல்லா முதலமைச்சராக இருந்தபோது காஷ்மீர் மாநில அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே பெண்மணி ஆவார்.[6]
சுயசரிதை
தொகுஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சபாநாயகராக இருந்த வாலி முகமது இட்டூவுக்கு 1970 திசம்பர் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் குல்காம் நகரில் பிறந்தார்.[7] இவர் 1991 இல் ஜம்மு-காஷ்மீர் மாநில பள்ளிக் கல்வி வாரியத்திலிருந்து தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.[8] பின்னர், மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். ஆனால் 1990இல் தனது தந்தை கொல்லப்பட்ட காரணத்தால் அரசியலில் சேர்ந்தார்.[7] தனது அரசியல் வாழ்க்கையின் போது, 1996இல் கல்வி, சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளில் அமைச்சராக பணியாற்றினார்.[7] பின்னர், இவர் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2002 வரை பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டில், நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.[3] பின்னர் 2004 ஆம் ஆண்டில் கட்சியால் சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3]
சர்ச்சைகள்
தொகு2014 மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில், குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரை இவருக்கு வாக்களிக்கவும், "அல்லாஹ்வின் பெயரில் திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்ய" கட்டாயப்படுத்தினார். இது சமூக ஊடகங்களால் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.[9][10] இவரது இந்த நடத்தை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக கருதப்பட்டது. காங்கிரசு கட்சி "இதில் ஒன்றும் தவறில்லை" என்று கூறி இவரது விதி மீறலை ஏற்க மறுத்துவிட்டது. இந்த காணொலியை பின்னர் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Desk, India TV News (29 November 2014). "At a glance: 9 Muslim women candidates from Kashmir valley contesting J&K assembly polls". www.indiatvnews.com.
- ↑ "Jammu and Kashmir minister Sakina Itoo files nomination from Noorabad". DNA India. 13 November 2014.
- ↑ 3.0 3.1 3.2 "Administrative Refirms, Inspections, Trainings & Grievances Department - Government of Jammu & Kashmir". jkaritrainings.nic.in.
- ↑ "Cabinet Minister - general administration department" (PDF). jkgad.nic.in.
- ↑ "Dr. Farooq, Omar express solidarity with Sakina Itoo". KNS. 26 April 2018.
- ↑ "Video of Jammu and Kashmir minister invoking religion for votes goes viral". Deccan Chronicle. 31 March 2014.
- ↑ 7.0 7.1 7.2 "Personality". Kashmir Life. 25 March 2013.
- ↑ "Miss Sakina Itoo (JKNC):Constituency- Noorabad (Kulgam) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "J&K minister Sakina seen in a video forcing an old man to vote for her". News18.
- ↑ "Video shows NC leader asking for support in the name of religion". Hindustan Times. 30 March 2014.
- ↑ "Viral Facebook video shows J&K minister Sakina Itoo forcing voter to support her". India Today. March 30, 2014.