சாகிரைட்டு
சல்பேட்டு கனிமம்
சாகிரைட்டு (Zaherite) என்பது Al12(OH)26(SO4)5·20H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் அலுமினியத்தின் சல்பேட்டு அணைவுச் சேர்மமாகும். வங்காளதேசத்தின் புவியியல் ஆய்வாளர் எம்.ஏ. சாகீர் என்பவரால் பாக்கித்தானின் பஞ்சாப், உப்பு மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கனிமத்திற்கும் அவர் நினைவாக 1977 ஆம் ஆண்டில் சாகிரைட்டு எனப் பெயரிடப்பட்டது. சாகிரைட்டு கனிமம் தண்ணீரில் மிகவும் கரையக்கூடியதாகும். மிகவும் வறண்ட சூழல்களைத் தவிர வேறு எங்கும் நிலைப்புத்தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை. இது தன்னிச்சையாக அறை வெப்பநிலையில் நீரேற்றமும் நீரிறக்கமும் அடைகிறது. வெள்ளை முதல் நீலம்-பச்சை வரையிலான நிறத்தில் சாகிரைட்டு காணப்படுகிறது.
சாகிரைட்டு Zaherite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Al12(OH)26(SO4)5·20H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | முத்து, மண் |
ஒப்படர்த்தி | 2.007 |
மேற்கோள்கள் | [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zaherite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.