சாகிர் அலி (பாரிஸ்டர்)
சாகிர் அலி பாரிஸ்டர் (Shakir Ali) ( 1879 ஆம் ஆண்டு ஜூன் 7 - 1962 ஆம் ஆண்டு டிசம்பர் 26) ஓர் இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார்.
சாகிர் அலி | |
---|---|
பிறப்பு | 1879 ஆம் ஆண்டு ஜூன் 7 லக்னோ |
இறப்பு | 1962 ஆம் ஆண்டு டிசம்பர் 26 |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், |
பணி | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சமயம் | இஸ்லாம் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசாகிர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் லக்னோவின் 20 மைல்கள் தொலையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார். இவரது மூதாதையர்கள் முகலாய ஆட்சியின் போது குவாசியாக செயல்பட்டனர். [1]
சாகிர் தனது ஆரம்பக் கல்வியை எம்.ஏ.ஓ அலிகரில் (இப்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்) முடித்தார். இவர் 1905 ஆம் ஆண்டில் லிங்கனின் விடுதியில் சட்டத்தில் பட்டம் படிக்க (லிங்கன் விடுதியின் நூலக பதிவுகள் படி) இங்கிலாந்து சென்றார். 1908 ஆம் ஆண்டில் பட்டம் பெற்று மீண்டும் இந்தியா வந்தார்.
சட்டத்துறை
தொகுபங்களிப்பு
தொகுபின்னர் இவர் பள்ளிகளின் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலம் கழித்து இவர் தனது சொந்த சட்ட நடைமுறைக்கு செல்ல விரும்பினார். இவர் இந்த பதவியை ராஜினாமா செய்து கோரக்பூரில் ஒரு சட்ட பேரறிஞராக பயிற்சி செய்யத் தொடங்கினார். இவர் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்தார். மீரட் சதி வழக்கு, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற ஐ.என்.ஏ வழக்குகள், கக்கோரி இரயில் கொள்ளை மற்றும் செளரி சௌரா தீ விபத்து வழக்கு போன்ற மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க சில வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
தொகுவெளியேறு இந்தியா இயக்கத்தின் போது இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மிக விரைவில் கட்சியில் முக்கிய சக்தியாக மாறினார். காங்கிரஸின் செயற்குழுவில் உறுப்பினரானார். இவர் இந்தியாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் மிகவும் பிரபலமாக இருந்தார். சாகிர் அலி 1921 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை (உ.பி. சட்டமன்ற காப்பகங்கள் தகவல்படி) சீர்திருத்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிர தேசியவாதியாக இருந்தார். 1920 ஆம் ஆண்டில் கோரக்பூரில் கிலாபத் இயக்கத்தை வழிநடத்தினார்.
ஒய்வு மற்றும் இறப்பு
தொகு45 ஆண்டுகளாக குற்றவியல் சட்டம் பயின்ற பின்னர் 1956 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் 1962 டிசம்பர் 26 அன்று தனது 84வது வயதில் 1962 டிசம்பர் 26 அன்று இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Ref: Abbasian-e-Kakori,book on Abbasi's by Mohammed Hassan Abbasi page 29 and 262