சாகி குந்தியா

சந்தன் கசூரி (Chandan Hajuri ; 20 சனவரி 1827 - 1870) சாகி குந்தியா என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் புரி ஜெகன்நாதர் கோயில் பூசாரியும், 1857 இந்திய கலகத்தில் பங்கேற்ற கவிஞரும் ஆவார். [1]

சாகி குந்தியா
Painting of Chakhi Khuntia.jpg
தாய்மொழியில் பெயர்சந்தன் கசூரி
பிறப்புசனவரி 20, 1827(1827-01-20)
புரி, ஒடிசா
இறப்பு1870 (அகவை 42–43)
புரி, ஒடிசா
தேசியம் இந்தியா

வாழ்க்கைதொகு

சந்தன் கசூரி, 1827ஆம் ஆண்டு சம்பா தசமி தினத்தில் ஒடிசாவின் புரியில் 7 சனவரி 1827 அன்று இரகுநாத் குந்தியா என்று அழைக்கப்படும் பீமாசென் கசூரிக்கும் கமலாபதி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் 12 வயதில் சுந்தர்மணி என்பவரை மணந்தார். சிறு வயதில், இவருக்கு ஒடியா, சமசுகிருதம், இந்தி இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டு, ஜெகன்நாதர் கோவிலில் தனது கடமைகளைச் செய்ய உதவியது. இவர் பாரம்பரிய மல்யுத்தத்தையும் கற்றுக்கொண்டார். பின்னர், புரியில் உள்ள இளைஞர்களுக்கு மல்யுத்ததையும், இராணுவப் பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார்.[2]

1857 கலகம்தொகு

சாகி குந்தியா மனுபாயின் குடும்ப அர்ச்சகராக இருந்தார். பின்னர் மனுபாய் ஜான்சியின் மன்னர் கங்காதர் ராவை திருமணம் செய்த பிறகு இலட்சுமிபாய் என மறுபெயரிடப்பட்டார். 1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியக் கலகத்திற்கு முன்னர் ஜகன்நாதர் கோவிலின் பூசாரியாக நாடு முழுவதும் பயணம் செய்தபோது சிப்பாய்களைத் திரட்டுவதிலும் கலகத்தை ஏற்பாடு செய்வதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார். கலகத்தின் போது, இவர் வடக்கு இராணுவ நிலையத்தில் நிறுத்தப்பட்டு ஆங்கிலேயர்களுடன் வீரத்துடன் போராடினார். கலகத்தின் போது இவர் கிளர்ச்சி தலைமையுடன் நேரடித் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்டது. பின்னர், இவர் கயாவில் கைது செய்யப்பட்டார். இவரது சொத்துக்கள் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.[3] 1858ஆம் ஆண்டில், மற்ற கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து 1858 ஆம் ஆண்டு இராணியின் பிரகடனத்தின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[4]

பிற்கால வாழ்வுதொகு

குந்தியா தனது வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக, இலக்கியப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு புரியில் கழித்தார். இவர் ஜெகன்நாதனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல பிரபலமான கவிதைகளையும், பாடல்களையும் இயற்றினார். இவர் இலட்சுமிபாயின் நினைவாக 'மனுபாய்' என்ற பனையோலைக் கையெழுத்துப் பிரதியையும் எழுதினார். இவர் 1870இல் புரியில் இறந்தார். [5]

சான்றுகள்தொகு

  1. "Chakhi Khuntia : A National Hero During the British Period" (PDF). 4 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "BIRTH ANNIVERSARY OF CHAKHI KHUNTIA (CHANDAN HAJURI)" (PDF). I&PR,Govt. of Odisha. 4 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Martyrs remembered". The Hindu. 2 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Chakhi Khuntia : A National Hero During the British Period" (PDF). 4 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Indian Culture and Education. Deep & Deep Publications pvt. Ltd.. 2009. பக். 124–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8450-150-6. https://books.google.com/books?id=3T2Ph_SmjtoC&q=chakhi+khuntia&pg=PA127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகி_குந்தியா&oldid=3292281" இருந்து மீள்விக்கப்பட்டது