சாக்கிரட்டீசுவின் மரணம்

ஜாக் லூயிஸ் டேவிட் என்பவரால் வரையப்பட்ட ஒரு ஓவியம்

சாக்கிரட்டீசுவின் மரணம் (The Death of Socrates) என்பது 1787 இல் பிரான்சிய ஓவியர் ஜாக் லூயிஸ் டேவிட் என்பவரால் வரையப்பட்ட ஓவியமாகும்.

சாக்கிரட்டீசுவின் மரணம்
ஓவியர்ஜாக் லூயிஸ் டேவிட்
ஆண்டு1787 (1787)
வகைஎண்ணை வர்ணம்
பரிமானங்கள்129.5 cm × 196.2 cm (51.0 அங் × 77.2 அங்)
இடம்École Nationale Supérieure des Beaux-Arts, பாரிஸ்

இக்காட்சி ஏத்தென்சில் இருந்தவர்களுக்கு எதிராக தன் கருத்தினைப் பரப்பி, இளையோரின் மனதைக் கங்கப்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்ட கிரேக்க தத்துவஞானி சாக்கிரட்டீசு நஞ்சருந்தி மரிக்கும் நிகழ்வைக் குறிக்கின்றது. இவ் ஓவியம் கிரிட்டோவும் பிளேட்டோவும், இரங்களுடன் கட்டில் ஓரத்தில் அமர்ந்திருப்பதையும் சாக்கிரட்டீசின் முழங்காலைப் பற்றிப் பிடித்திருப்பதையும் சித்தரிக்கின்றது. சாக்கிரட்டீசு தன் மெய்யியல் திறனை விட்டுவிட்டு நாடுகடத்தப்பட அல்லது கெம்லொக் எனப்படும் நச்சுப் பாணத்தைக் குடித்து மரணிக்க என இரு தெரிவுகளைக் கொண்டிருந்தார். சாக்கிரட்டீசு மரணத்தைத் தெரிந்து கொண்டார். இக் காட்சியில், சிவப்பு மேலாடை அணிந்த சீடர் நஞ்சுள்ள குவளையினை துணிவுமிக்க சாக்கிரட்டீசுவிடம் கையளிக்கிறார். சாக்கிரட்டீசுவின் மோட்சத்தை சுட்டிக்காட்டும் கை, அவர் தன் கடவுள்களிடம் பயபக்தியையும் தன் மரணம் பற்றிய பயமற்ற மனப்பான்மையையும் காட்டுகின்றது. இது ராபியேல் சான்சியோவின் ஏதென்சு கல்விக்கூடம் ஓவியத்தின் மத்திய காட்சியின் செல்வாக்குப் போன்றுள்ளது.

இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ் காட்சியகத்தில் இவ் ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1]

குறிப்புகள்

தொகு
  1. "The Death of Socrates by Jacques-Philip-Joseph de Saint-Quentin". friends-of-art.net. பார்க்கப்பட்ட நாள் August 3, 2011.

வெளி இணைப்புக்கள்

தொகு