சாக்ரோமீட்டர்

சாக்கரோமீட்டர் (Saccharometer) என்பது ஒரு திரவத்தில், சர்க்கரையின் அளவை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை திரவமானி ஆகும். இது தாமஸ் தாம்சனால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இது முதன் முதன்முதலில் வைன் மற்றும் மது வகை தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டது.[2] பிறகு, சர்பத்து மற்றும் ஐஸ்கிரீம்கள் தயாரிப்பில், சர்க்கரையின் அளவை கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.[3]

20 ஆம் நூற்றாண்டின் சாக்ரோமீட்டர்

முதல் மதுவகை சாக்கரோமீட்டர் பெஞ்சமின் மார்ட்டின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பாவர்ஸ்டாக் என்பவரால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[4] ஹென்றி த்ரில்லே என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் 1784 ஆம் ஆண்டில் ஜான் ரிச்சர்ட்சனால் பிரபலப்படுத்தப்பட்டது.[5]

சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, திரவத்தின் அடர்த்தி அதிகமாகும். அடர்த்தி அதிகமாகும் போது சாக்ரோமீட்டர் மேலே மிதக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Explanation of Allan's saccharometer: appointed by Act of Parliament for the ..., Thomas Thomson
  2. Country house brewing in England ... - Google Books. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  3. Patisserie - Google Books. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  4. The Brewing Industry in England... - Google Books. பார்க்கப்பட்ட நாள் 2012-03-16.
  5. Instruments of science: an ... - Google Books. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்ரோமீட்டர்&oldid=3734440" இலிருந்து மீள்விக்கப்பட்டது