சாக் டிக்சியர்
பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
சாக் டிக்சியர் (Jacques Tixier) [1] பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் தேதியன்று பிறந்தார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியன்று இறந்தார். கத்தார், லெபனான் மற்றும் வட ஆப்பிரிக்காவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இவரது பணிக்காக குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் முதல் பிரெஞ்சு தொல்பொருள் பணியை வழிநடத்தினார். [2] இவரது குழு, மிசன் ஆர்க்கியோலாசிக் பிரான்சாய்சு கத்தார், இந்த ஆண்டு அல் கோர் தீவைக் கண்டுபிடித்தது. [3] இவர் சாக்ராவில் தொல்பொருள் தளத்தையும் கண்டுபிடித்தார். [4] டிக்சியர் 1980 ஆம் ஆண்டு குழுவின் கண்டுபிடிப்புகளின் இரண்டு தொகுதிகளில் ஒன்றை வெளியிட்டார். இரண்டாவது தொகுதி அவரது சக மேரி-லூயிசு இனிசானால் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mort de l'archéologue Jacques Tixier". http://mobile.lemonde.fr/disparitions/article/2018/04/16/mort-de-l-archeologue-jacques-tixier_5286185_3382.html.
- ↑ Mission archéologique française à Qatar. பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
- ↑ "Prospections et fouilles au Qatar" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
- ↑ "The Discovery of Qatar's Past".
- ↑ Qatar Prehistory and Protohistory from the Most Ancient Times (Ca. 1,000,000 to End of B.C. Era).