சாங்கி கடலோர பூங்கா

(சாங்கி கடற்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாங்கி கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும். 28 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும். சாங்கி முனையம் தொடங்கி சாங்கி பெர்ரி சாலை வரை சுமார் 3.3 கிலோ மீட்டார் தொலைவிற்கு இந்த பூங்கா அமைந்து இருக்கிறது.

பொழுது போக்கு அம்சங்கள்

தொகு

வார இறுதியை கழிக்க பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் இந்த கடற்கரையை நாடுகிறார்கள். இராத்தங்கல் சிற்றுலா, உல்லாசப் பயணங்கள், மற்றும் சூரிய உதயம், அஸ்தமனம் போன்றவற்றை காணவும் இங்கு வருகின்றனர். இங்க உள்ள சாங்கி கிராமம் மற்றும் பிஸ்ட்ரோ@சாங்கி போன்ற இடங்களின் உணவு வகைகளை சுவைப்பதற்கும் இங்கு வருகின்றனர்.

இங்கு செல்ல

தொகு

சாங்கி கடலோர பூங்காவிற்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 9, 19 ,89 ஆகிய பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த பேருந்துகளை எடுப்போர் நிகோல் டிரைவ் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மற்ற சேவை என்கலான 2, 29, 59 , 109 போன்றவற்றை எடுப்போர் சாங்கி கிராமத்தில் இறங்கி ஐந்து நிமிடத்தில் நடந்து இந்த கடற்கரையை அடையலாம்.

கடற்குதிரை கண்காணிப்பு திட்டம்

தொகு

2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல், தேசிய பல்லுயிர்மக் கழகம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றின் தொண்டூழியர்கள் இணைந்து இங்கு கடல் குதிரையின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். கடற்குதிரை பாதுகாப்பு திட்டத்தின் கீழ இங்கு அவற்றின் எண்ணிக்கை , வளர்ச்சி மற்றும் குழாய்மீன்கள் பற்றியும் ஆராய்ச்சி நடைபெறுகிறது.

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கி_கடலோர_பூங்கா&oldid=3367040" இலிருந்து மீள்விக்கப்பட்டது